பக்கம்:துளசி மாடம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 துளசி மாடம்


  • * * * * * * * *

அவர் அப்படி வண்டியில் உட்கார்ந்தபடி பேசிக் கொண்டு வர தான் பின்னால் அதற்குப் பதில் சொல்லிய படியே தொடர்ந்து நடந்து செல்வதைச் சர் மா விரும்ப வில்லை,

“வரேன்...அப்புறமாப் பார்க்கலாம்"-என்று கூறி கிட்டு விரைந்து வண்டியைக் கடந்து அதற்கு முன்னால் நடக்கத் தொடங்கினார் அவர். ஒர் அயோக்கிய துக்குக்கூட நல்லவனைப் போலப் பிறருக்கு முன் தன்னைக் காட்டிக்கொள்ளும் பா வ ைன யை விட முடியாமல் இருப்பதைப் பற்றிச் சிந்தித்தார் அவர். சில சமயங்களில் சுபாவமாகவே நல்லவனாயிருப்பவனை மிஞ்சிவிடும் அளவுக்குப் பாவனையினால் நல்லவராக இருப்பவர்கள் சாதுரியமாக நடித்து அதில் வெற்றியும் பெற்று விடுவதாகக்கூடத் தோன்றியது

பூர்வஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோ கமலி இந்தியக் கலாசாரம், இந்திய வழிபாட்டு முறை என்றால் அதற்காக மனம்நெகிழ்ந்து உருகுகிறாள். கோவிலுக்கு உள்ளம் மலர்ந்த பக்தியுடனும் சிரத்தை யுடனும் ஒடுகிறாள்.

அந்த கலாசாரத்திலேயே அதன் வாரிசாகப் பிறப் பெடுத்திருப்பவராகச் சொல்லிக் கொள்ளும் சீமா வையருக்குச் சீட்டாடவே நேரம் போதவில்லை அவர் கோவிலுக்குப் போய் வருஷக் கணக்கில் இருக்கும். ஆவலோடு கோவிலுக்குப் போகிறவளுக்கு ஏன் போகி றாய் என்று வக்கீல் நோட்டீஸ் மட்டும் அனுப்ப முடிகிறது. இந்த முரண்பாட்டை நினைத்துப் பார்த்த போது சர்மாவின் உள் மனம் கொதித்தது.

FfLಗ್ಗ தேடிச் சென்றபோது வேணுமாமா எங்கோ புறப்படத் தயாராயிருந்தாற்போல் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/210&oldid=579926" இலிருந்து மீள்விக்கப்பட்டது