பக்கம்:துளசி மாடம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 209


"எ ங் கே ேயா கிளம்பிண்டிருக்கேள் போல் இருக்கே...? போயிட்டு அப்புறம் சாவகாசமா வரட்டுமா ?”

"அவசரம் ஒண்ணுமில்லே! வாங்கோ, போஸ்டாபீல் வரை போலாம்னு புறப்பட்டேன். இப்போது உடனே போய்த்தான் ஆகணும்கிறதில்லே. அப்புறம்கூடப் போய்க்கலாம். நீங்க உட்காருங்கோ... அதென்ன கையிலே லெட்டரா ?"

சர்மா உ ட் கா ர் ந் தா ர். வேணுமாமாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அந்தக் கடிதங்களையே அவரிடம் நீட்டினார். -

படியுங்கோ.இது விஷயமாகத்தான் உங்ககிட்டப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன் இது ரெண்டும் இப்பத்தான் சித்தே முன்னாடி ரிஜிஸ்டர் தபால்லே வந்தது..." - - -

"ஒண்னு கமலி பேருக்கு வந்திருக்காப்லே இருக்கே " "ஆமாம் அவ பேருக்கு ஒண்னும் எம் பேருக்கு ஒண்ணுமா வந்திருக்கு..."

-வேனுமாமா அ வ ற் ைற ஒவ்வொன்றாகப் படித்தார்.

"ஒகோ விஷயம் இவ்வளவு தூரத்துக்கு வந்துடுத்தா யார் வேலை இதெல்லாம் ? வைக்கோல் படப்புக்குத் தீவைச்சு நாசம் பண்ணினது போறாதுன்னு இது வேறயா?” - - - -

"யார்னு நான் சொல்லித்தான் தெரியனுமா ? எல்லாம் சீமாவையர் வேலைதான் ! என்னமோ ஆத்திரத் தில்ே, எது எதையோ பண்ணிண்டிருக்கார். என்மேலே தான் ஆத்திரம் ; என் வீட்டிலே வந்து தங்கின பாவத் துக்கு அந்தப் பொண் மேலேயுமா இப்படி விரோதம் காண்பிக்கனும் ?" -

து-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/211&oldid=579927" இலிருந்து மீள்விக்கப்பட்டது