பக்கம்:துளசி மாடம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 துளசி மாடம்


ரவியும் கமலியும், ஊருக்கு வந்ததிலிருந்து இலை மறைகாயாக அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த வர்களுக்கு இறைமுடிமணியின் பகுத்தறிவுப் படிப்பகத். தில் நடந்த கமலியின் சொற்பொழிவும் அந்தச் சொற் பொழிவில் கமலியை அறிமுகப்படுத்திய அவர் விசுவேசுவர சர்மாவின் எதிர்கால மருமகள்' என்கிற குறிப்புடன் கமலியைப் பற்றிக் கூறியிருந்ததும் ரவியைக் கொண்டே அவளுக்கு மாலையணிவிக்கச் செய்ததும் இப்போது வதந்திகளை வளர்த்து மிகவும் அதிகப் டடுத்தியிருந்தன.

சர்மாவிடமே பகுத்தறிவுப் ப டி ப் ப க ச் சொற் பொழிவில் அவரது எதிர்கால மருமகள் என்று கமலியை இறைமுடிமணி அறிமுகப்படுத்தியது பற்றி இரண்டொருவர் விசாரித்திருந்தனர். ஒளிவு மறைவர்கப் பேசுவதோ விஷயங்களைப் பூசி மெழுகுவதோ, ஆஷ்ர்டபூதித்தனமோ இறைமுடிமணிக்கு அ ற வே. பிடிக்காதென்பது சர்மாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் வக்கீல் நோட்டிஸுகளைப் பற்றியும், இதைப் பற்றியும் இறைமுடிமணியிடமே நேரில் பேச வேண்டு மென்று எண்ணினார் அவர்.

கமலியையும் ரவியையும் கோவிலுக்கு அனுப்பி விட்டு இறைமுடிமணியைப் பார்க்கப் புறப்பட்டிருந்தார். &#fffff".

முதலில் பலசரக்குக் கடைக்குப் போய்ப் பார்த்தார் அங்கே அவர் இல்லை. அவருடைய மருமகன் குருசாமி தான் இருந்தான். அவனே விவரமும் சொன்னான்.

"மாமா விறகுக் கடையிலே இருக்காக. அங்ங்னே, போனாப் பார்க்கலாம்."

பலசரக்குக் கடையில் நல்ல கூட்டம் இருந்தது. சீமா

வையரின் துஷ்பிரசாரம் எதுவும் எடுபடவில்லை என்று தெரிந்தது. கலப்படமில்லாமல் விலையும் நியாயமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/216&oldid=579932" இலிருந்து மீள்விக்கப்பட்டது