பக்கம்:துளசி மாடம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 துளசி மாடம்


சர்மா வந்ததும் அவரே பேச்சை ஆரம்பித்தார்:

"எனக்கும் கமலிக்கும் வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கு, வேணு மாமாவுக்கும் உனக்கும் தவிர வேறு யாருக்கும் நான் இதைச் சொல்லலே. கமலிக்கும் ரவிக்கும் மட்டும் தெரியும்."

"எதுக்கு வக்கீல் நோட்டீஸ் :யார் விட்டிருக்கானுவ?"

யார்னு சொல்றது? எல்லாம் ஊர் ஜனங்கள்தான். என் நடத்தைகள் மடத்து முத்ராதிகாரிங்கிற பதவிக்கும், வைதிகத்துக்கும் பொருத்தமாயில்லியாம். கமலி இந்து ஆலயங்களுக்குள்ளே கேள்வி முறை இல்லாமத் தரிசனத் துக்குப் போறாளாம்..." .

“உங்க ஆளுங்களைப் போலப் பொறாமை புடிச்ச வங்க உலகத்துலேயே கிடையாதுப்பா வரவரக் கோயி இக்குப் போற ஆளுங்களே கொறைஞ்சி போச்சு. நமக்குப் புடிக்குதோ புடிக்கலியோ அதை நிஜமா தம்பிப் போற ஒருத்தர் ரெண்டு பேரையும் உங்க ஆளுங்களே கெடுத்துப் போடுவாங்கன்னு தோணுதுப்பா அதுக்கு எங்க பிரச்சாரமே கூட வேணாம் போலிருக்கே."

"சிமாவையர்தான் தூண்டி விட்டு எல்லாக் காரியமும் பண்ணுவர்னு தோண்றது. என்னை நேரே பார்த் துட்டாத் தேனாப் பேசறார், விசாரிக்கிறார். ஆனாப் பின்னாலே பண்றதும் தூண்டி விடறதும் எல்லாம் இப்பிடிக் காரியங்களா இருக்கு-"

"அவன் நாசமாப் போயிருவான். பாம்பு, தேளு, நட்டுவாக்கிலி மாதிரித் திரிஞ்சுக்கிட்டு இந்த ஊரைக் கெடுக்கிறான். எங்கடையை ஒழிச்சிப்பிடறதுன்னு தலை கீழே நின்னு பார்த்தான். (முடியலே. ஜனங்க சரக்கு எப்படியிருக்குதுன்னு பார்த்தாங்களே ஒழிய ஆளு யாருன்னு பார்க்கவே."ட 3. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/218&oldid=579934" இலிருந்து மீள்விக்கப்பட்டது