பக்கம்:துளசி மாடம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 துளசி மாடம்


'தவிர்க்கறதுங்கிற எண்ணத்தையே நீங்க விட்டுட னும் மாமா! ரவியையும், கமலியையும் இனிமே நீங்க பிரிக்கிறது நடக்காத காரியம். நான் பாரிஸ்லே கமலி கிட்டேயிருந்து விடைபெற்றபோது, அவ ரொம்ப பிரியத் தோட என்க்கு ஒரு ஆல்பம் பிரஸண்ட்' பண்ணினர். நீங்க தப்பா நின்னச்சுக்கலேன்னா உங்களுக்கு இப்போ அதைக் காண்பிக்கிறேன்.'

மனத்தின் மேற்பரப்பில் மண்டிக் கிடந்த வித்தியாசங் களையும் வெறுப்புக்களையும் மீறி மகனைக் கவர்ந்த அந்தப் பிரெஞ்சு யுவதியைப் படத்திலாவது பார்க்க வேண்டுமென்று சர்மாவுக்கும் ஆவலாகத்தான் இருந்தது. ஆனால், அந்த ஆவலை அவர் வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் தமது சம்மதத்தையும் தெரிவிக் காமல், சம்மதமின்மையையும் தெரிவிக்காமல் மெளன. மாக இருந்தார்.

'மாமாவுக்கு ஆல்பத்தைக் கொண்டு வந்து காண் பியேன். பார்க்கட்டும்" என்று தம் மகளிடம் சொல்லி விட்டு சர்மாவின் பக்கம் திரும்பி, எவ்வளவு விகல்ப மில்லாத மனசு இருந்தா இப்படித் தங்கள் படத்தை எல்லாம் ஒட்டின ஆல்பத்தை எங்க ஞாபகார்த்தமா வச்சிக்குங்கோ'ன்னு குடுக்கனும்கிறதை நினைச்சுப் பாருங்கோ சர்மர். பிரெஞ்சு ஜனங்களே நல்ல மாதிரி அதுவும் உங்க ரவியோட... இவ் இருக்காளே-அதான் -கமலி-அவ - அற்புதமான பொண்ணு. இன்னிக்குப் பூராவும் அவளோட சிரிச்சுப் பேசிண்டிருக்கலாம்னு தோனும், இங்லீஷ்லே, பிரான்ஸ் இஸ் நாட் எ கண்ட்ரீ பட் ஆன் ஐடியா'ன்னு ஒரு வசனம் உண்டு. அது நூத் துக்கு நூறு உண்மை சர்மா..." என்றார் வேணுமாமா.

இப்படி வேணுமாமாவும் கமலியைப் புகழ்ந்து பேசவே சர்மா யோசிக்கத் தொடங்கினார். முதலில் வேனுமாமாவின் _பெண் வசந்தி அவளைப் புகழ்ந்து பேசியிருந்தாள். இப்போது வேணுமாமாவும் அந்தப் பிரெஞ்சு யுவதியைச் சிலாகித்துச் சொல்கிறார். ரவி யையும் அந்தப் பிரெஞ்சு யுவதியையும் பிரித்து வைக்க முயலும் தன் திட்டத்துக்கு அப்பாவோ, பெண்ணோ பாரிஸில் யுனஸ்கோவில் இருக்கும் வேணுமாமாவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/22&oldid=579737" இலிருந்து மீள்விக்கப்பட்டது