பக்கம்:துளசி மாடம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 221


பார்வதி அப்பா சொன்னபடியே செய்தாள். அவள் எடுத்துக் கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்த தும் சர்மாவின் முகம் மலர்ந்தது.

'காயா பழமா அப்பா ?” "பழந்தான் அம்மா!"-பிரித்த பூப்பொட்டலத்தை அப்படியே கண்களில் ஒற்றிக் கொண்டார் அவர், வாசலில் யாரோ படியேறி வருகிற ஒசை கேட்டது. பார்வதி எட்டிப் பார்த்துவிட்டு, 'அண்ணாவும் கமலியும் கோயில்லேருந்து திரும்பி வராப்பா..." என்றாள்.

பொன்நிற நெற்றியில் வெளேரென்ற விபூதிக் கீற்றும் குங்குமமுமாகக் கமலி சர்மாவுக்கு முன்வந்து, 'கோவில் பிரசாதம் வாங்கிக் கொள்ளுங்கள்'-என்று தட்டில் காகிதங்களில் மடித்து வைத்திருந்த விபூதி, குங்குமம், வில்வத் தளங்களை அவர் முன் நீட்டினாள்.

22

பரம வைதீகரான அப்பா எங்கே கமலியின் கையிலிருந்து பிரசாதம் வாங்காமல் நாசூக்காகத் தட்டிக் கழித்து விடுவாரோ என்று உடன் வந்து அருகே நின்ற ரவி மனத்தில் எண்ணித் தயங்கினான். ஆனால் அப்படி ஏதும் நடந்து விடவில்லை. .

சர்மா புன்முறுவலோடு பிரசாதம் எடுத்துக்

கொண்டார். கமலி கையிலிருந்த தட்டைக் கண்களில் ஒற்றிக் கொண்டு அவர் பிரசாதம் எடுத்துக் கொண்ட காட்சியை ரவியால் அப்போது நம்பவே முடியாமல் இருந்தது. .

"திருப்பணிக்குப் பணம் குடுத்து ரசீது வாங்கி னேளா?" .

"இதோரசீது வாங்கியிருக்கோம்ப்பா."-ரவி கோயில் திருப்ணிேக்குப் பணம் கொடுத்துக் கமலி பேருக்கு வாங்கியிருந்த ரசீதை எடுத்து அப்பாவிடம் நீட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/223&oldid=579939" இலிருந்து மீள்விக்கப்பட்டது