பக்கம்:துளசி மாடம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 துளசி மாடம்


கமலி மாடிக்குப் போனாள். அவளைப் பின் தொடர்ந்த ரவியை, "நீ கொஞ்சம் இரு... உங்கிட்டப் பேச வேண்டியதிருக்கு" -என்று அவன் காதருகே கூறினார் சர்மா.

"இதோ வந்துடறேன்ப்பா : ஒரு நிமிஷம்" என்று அவருக்கு மறுமொழி கூறிவிட்டு மாடிப்படியேறினான் ரவி.

·දා ိ a ū &

அந்த வினாடியில் சர்மாவின் மனநிலை துல்லியமாக வும் தெளிவாகவும் இருந்தது. ஒரு பரிசுத்தமான பூரண ஞானியின் துணிச்சலுடனும், ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வெறுப்பற்ற மகிழ்ச்சியுடனும் இருந்தார்

•o}}6hJFT -

மாடிக்குப் போன ரவியை எதிர்பார்த்துக் கையில் பஞ்சாங்கத்துடனும் பென்சில் பேப்பருடனும் மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவரைப்போல் கீழேயே காத்திருந்தார் அவர்.

ஏதோ இனம் புரியாமல் ரவிக்கும் மனத்தில் ஒரு குது.ாகலம் பிறந்திருந்தது. அப்பா தன்னைக் கூப்பிட்டுக் கமலியைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போகச் சொன்னதும், கமலியின் கையிலிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டதும் அதன்பின் உடனே 'உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும். வருகிறாயா? -என்று தன்னைத் தனியே அழைத்ததும் நல்ல அடையாளங்களாகப் பட்டன. அவனுக்கு.

அப்பா கொஞ்சமும் தயக்கமின்றிக் கமலியின் கையி லிருந்து கோயில் பிரசாதத்தை வாங்கிக் கொண்ட பெருந்தன்மையை அவளிடமே சொல்லி வியந்துவிட்டு, "இதுவே அம்மாவாயிருந்தா ஒரு nன் கிரியேட் பண்ணியிருப்பா கமலி! என்னதான் இருந்தாலும் அப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/224&oldid=579940" இலிருந்து மீள்விக்கப்பட்டது