பக்கம்:துளசி மாடம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 225


கேபிள் குடுத்தா கமலியோட அப்பா அம்மா ரெண்டு பேருமே கூட இங்கே வருவா அப்பா... ஆனா நீங்க சொல்ற முகூர்த்தத்துக்குள்ளே அது முடியாது. வேணுமாமாவை வேணாக் கேட்டுப் பார்க்கலாம்.'

'எண்டா எற்கெனவே நீ அவரிட்டப் பேசி முடிவு பண்ணி வச்சாச்சா? என்னமோ தயாரா எல்லாம் ஏற்பாடு பண்ணிட்ட மாதிரிச் சொல்றியே?’’

'இல்லே... கேட்டா ஒத்துப்பார்னு பட்டது. அதான் சொன்னேன்.”

'சரி வா, போகலாம். அவரிட்டேயே நேரக் கேட்டுடுவோம்.' - - - -

"நான் எதுக்குப்பா? நீங்க கேட்டாலே ஒத்துப்பார். நானும் அவசியம் உங்க கூட வந்தாகணும்னா வரேன்.' 'சும்மா கூட வாயேன். போயிட்டு வரலாம். நீ ஒண்ணும் பேசவேண்டாம். கேட்கிறதெல்லாம் நானே அவசிட்டக் கேட்டுக்கறேன்.' -

கூட வருவதற்கு ரவி சற்றே சங்கோ ஜப்பட்டாற் போலத் தோன்றியது. ஆனாலும் தட்டிச் சொல்லாமல் புறப்பட்டான். அந்த விஷயத்தில் அப்பாவின் திடீர் முடிவும் அவர் காட்டிய அவசரமும் உண்டாக்கிய சந்தோஷ அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவனால் முற்றாக மீள முடியவில்லை. அதனால் தெருவில் நடந்து போகிற போது அப்பாவிடம் அவன் எதுவுமே பேசக்கூட இல்லை. வீட்டிலிருந்தபடி இறங்கியதும் நிறைந்த தண்ணீர்க் குடத்தோடு ஒரு சுமங்கலி தெருவில் எதிர்ப்பட்டபோது ‘சகுனம் ரொம்ப நன்னா ஆறது" என்றார் சர்மா.

வேனுமாமா வீட்டை அவர்கள் அடைந்தபோது அவர் திண்ணையிலிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே ஒரு பெரிய பழுக்காத் தாம்பாளம் நிறையப் பழம்-பூ வெற்றிலை பாக்கு-பச்சை ஏலக்

- து-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/227&oldid=579943" இலிருந்து மீள்விக்கப்பட்டது