பக்கம்:துளசி மாடம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி е за

பிள்ளையோ ஒத்துழைப்புத் தரமாட்டார்கள் என்பது சர்மாவுக்கு இப்போது குறிப்பாகவும், தெளிவாகவுமே புரிந்தது.

வேணு மாமா பேசியபோதே உங்க ரவியோட... இவ’ என்று அவர் சொல்லிய வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்ததில் ரவியோட மனைவி' என்று முதலில் சொல்ல நினைத்துப் பின்பு அந்த ஒரு வார்த்தையை விழுங்கிவிட்டு இவ' என்பதாக மழுப்பிக் கூறினாரோ என எண்ணினார் சர்மா. ஒருவேளை ரவியும் கமலியும் காதலர்கள் என்ற நிலையையும் கடந்து அங்கெல்லாம் மோதிரம் மாற்றிக் கல்யாணம்'- என்று சொல்கிறார் களே, அப்படிக் கல்யாணமே செய்து கொண்டு விட்டார் களோ என்றும் சந்தேகமாயிருந்தது அவருக்கு.

வசந்தி அந்த அழகிய ஆல்பத்தைச் சர்மாவிடம் கொடுத்தாள். அவர் பிரித்த முதல் பக்கத்திலேயே வெண் பனி மூடிய மலைச்சரிவு ஒன்றில் ரவியும், அந்தப் பிரெஞ்சு யுவதியும் பணிச்சறுக்கு விளையாட்டு விளை யாடும்போது எடுக்கப்பட்ட அழகிய வண்ணப் படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

சர்மாவுக்கு அருகே நின்று அவர் ஆல்பத்தைப் பிரிப் பதைக் கவனித்துக் கொண்டிருந்த வசந்தி "இந்தப் படம் ரவியும் கமலியும் ஸ்விட்ஜர்லாந்துக்கு உல்லாசப் பிரயாணம் போயிருந்தபோது எடுத்ததுன்னு சொன்னா-' என்று அவருக்கு விளக்கினாள்.

"சர்மா படத்தைப் பார்த்து வெறும் உல்லாசப் பிரியமும், விளையாட்டுப் புத்தியும் அசல் லெளகீக ஆசை களும் மட்டுமே உள்ளவளா இருப்பா போலிருக்கேன்னு: நினைச்சுடாதிரும். கமலியைப்போல புத்திசாலிப் பொண்னை நீர் ஐரோப்பா முழுவதும் தேடினால்கூடக் கண்டுபிடிக்க முடியாது. பிரெஞ்சு தவிர ஜெர்மனும், இங்கிலீஷலிம் அவளுக்குத் தெரியும். ரவிகிட்ட சமஸ் கிருதமும், தமிழும், இந்தியும் கத்துக்கறா..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/23&oldid=579738" இலிருந்து மீள்விக்கப்பட்டது