பக்கம்:துளசி மாடம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 துளசி மாடம்


எக்ஸ்பிரஸ்தான் மாமா. எப்படியும் நாளைக் காலம் பரத்துக்குள்ளே வசந்திக்குக் கிடைச்சு அவ பம்பா யிலிருந்து இங்கே புறப்பட்டுடலாம்?'

சர்மா கையோடு பஞ்சாங்கம் கொண்டு வந்திருந்த தைப் பார்த்து முகூர்த்தக் கால் நடுவதற்கும் லக்கினப் பத்திரிகை வைப்பதற்கும் உடனே நாள் பார்த்துச் சொல் லும்படி அப்போதே அவரை வேண்டினார் வேணுமாமா. சர்மாவும் உடனே பொறுமையாகவும், நிதானமாகவும் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்து விவரங்களைத் தெரிவித்தார்.

அன்று தமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் ரவியையும் சர்மாவையும் வடை பாயசத்தோடு அங்கே தம் வீட்டி லேயே சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டுமென்று மன்றாடினார் வேணுமாமா.

'அதெல்லாம் இன்னிக்கி வேண்டாம். லக்கினப் பத்திரிகை எழுதற அன்னிக்கி வச்சிக்கலாம். உங்க வீட்டுச் சாப்பாடு எங்கே ஒடிப் போறது?" என்று சொல்விக் கொண்டு வேணுமாமாவிடம் விடை பெற்றுத் தன் மகன் ரவியுடன் வீடு திரும்பினார் சர்மா.

திரும்பி வீட்டுக்கு நடக்கிறபோது அவர்கள் ஒருவருக் கொருவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. என்றாலும், "தங்கமான மனுஷன், உபகாரி. உபகார குணமும் மனோ தைரியமும் மனுஷா கிட்டச் சேர்ந்து அமையறது ரொம்ப வும் அபூர்வம். சில பேர் இது மாதிரி நல்ல காரியத்துக்கு முன் வந்து உபகாரம் பண்ணனும்னு நினைப்பன். ஆனால் துணிஞ்சு முன் வந்து உபகாரம் பண்றத்துக்கு வேண்டிய மனோ தைரியம் இராது"-என்று வேணு மாமாவைப் புகழ்ந்து சொல்லிக் கொண்டு வந்தார் of Löss. - - -

- ரவி, அப்பா சொல்லியதை ஆமோதிப்பதுபோல் மைளனமாக இருந்தான். ஏற்பாடுகள் நிறைவென்துகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/234&oldid=579950" இலிருந்து மீள்விக்கப்பட்டது