பக்கம்:துளசி மாடம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 233


வரை இது பற்றிப் பிறரிடம் எதுவும் பேசுவதில்லை என்று இருவரும் பரஸ்பரம் தங்களுக்குள் எச்சரிக்கை உணர்வோடு கூறிக் கொண்டார்கள். காமாட்சியம்மா ளிடம் இது பற்றிப் பேசுகிற பொறுப்பைக்கூட வேணு மாமா சொல்லியதுபோல் வசந்தியின் வசம் விட்டுவிட லாம் என்று தந்தை, மகன் இருவருமே கருதினார்கள், அன்றிரவு கமலியிடம் மட்டும் குறிப்பாக இந்த விஷயத் தைப் புலப்படுத்தினான் ர்வி -

மறுநாள் காலை முதல் தபாலில் கிடைத்த ஒரு கடிதம் அவர்கள் ஏற்பாடில் சிறு மாறுதல் ஒன்றை உண்டாக் கியது. சர்மாவுக்கும் கமலிக்கும் வக்கீல் நோட்டீஸ்கள் அனுப்பியிருந்தவர்கள் அதன் நகல்களை பூர் மடம் ஹெட் ஆபீஸ்,மானேஜருக்கு அனுப்பியிருந்ததுடன், சர்மாவை யும் ரவியையும் இல்லாததும் பொல்லாததுமாகக் குறை சொல்லி சில மொட் டைக் கடிதங்களும் கூடப் போட்டிருந் தார்கள் போலிருக்கிறது.

பூரீ மடம் மானேஜர் அவற்றைப் பொருட்படுத்த வில்லை. என்றாலும் ரவியையும், அவனோடு வந்திருக்கும் பிரெஞ்சுப் பெண்மணியையும் பூரீ மடத்துக்கு வரச் சொல்லி, பெரியவர்களைத் தரிசனம் செய்து விட்டுப் போகுமாறு யோசனை கூறியிருந்தார். எழுதியிருந்த பாணியிலிருந்து அந்தத் தரிசனமே இவர்களுக்கு ஒரு சோதனையாகவோ பரீட்சையாகவோ அ ைம யும் போலிருந்தது. பெரியவர்களின் குறிப்பறிந்து அந்த மகா ஞானியின் சமிக்ஞையோ ஆக்ஞையோ பெற்றுத்தான் அந்தக் கடிதமே மானேஜரால் எழுதப்பட்டிருக்குமென்று சர்மாவால் சுலபமாக அனுமானிக்க மூடிந்தது,

கடிதத்தை ரவியிடம் படிக்கக் கொடுத்து, அவளைக் கூட்டிக்கொண்டு ஒரு நடை போய்விட்டு வா! பெரியவர் களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்"- என்றார் சர்மா. ரவி அதற்கு உடனே ஒப்புக்கொண்டான். ஆனால் சிறிது தயக்கத்தோடு தந்தையைக் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/235&oldid=579951" இலிருந்து மீள்விக்கப்பட்டது