பக்கம்:துளசி மாடம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 235


பழைய நாள் சுங்குடிப் புடவை போலத் தோன்றிய ஒர் எளிய கைத்தறிப் புடவை அணிந்து குங்குமத் திலக மிட்டு, நீராடிய ஈரம் புலராத கூந்தலை நுணிமுடிச்சிட்டுக் கொண்டு அதிகாலையின் புனித உணர்வுகள் நிறைந்த மனத்துடன் புறப்பட்டிருந்தாள் கமலி. நிறமும் கண் களும், கூந்தலும் வித்தியாசமாகத் தோன்றின என்பது தவிர மற்ற விதங்களில் அவள் ஓர் இந்தியப் பெண் ணாகவே காட்சியளித்தாள். சில நோட்டுப் புத்தகங்களும் டைரியும் அவள் கையில் இருந்தன.

அரையில் சரிகைக் கரையிட்ட பட்டாடையும், மேல் உத்தரியமும், டொன் நிற மார்பில் வெனேரென்று மின்னல் இழையாகத் துலங்கிய யக்ஞோபவிதமுமாகப் புறப்பட்டிருந்தான் ரவி. நடுவழியில் பழக்கடை, பூக் கடை இருந்த பகுதியில் நிறுத்தி ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சைப் பழங்களும், ஒரு பச்சைத் து:ைசி மாலையும் வாங்கிக் கொண்டார்கள் அவர்கள்.

அதிகாலையில் கிழக்கு வெளுத்துக் கொண்டிருக்கும் போது அப்படி ஒரு தரிசனத்துக்காகப் போவது மனத் துக்கு ரம்மியாக இருந்தது. ரவி கமலி இருவருடைய மனங்களும், சரீரங்களும் அப்போதுதான் பூத்தபூக்களைப் போல் சிலிர்ப்புடனும் நறுமணத்துடன் தண்ணென்றும் களங்க மற்றும் இருந்தன. மனங்களும் உடல்களும், உஷ்ணமின்றிக் குளிர்ந்திருந்தன.

அந்த அதிகாலையிலும்கூடப் பெரியவர்கள் தங்கி யிருந்த மாந்தோப்புக்கு வெளியே நாலைந்து டுரிஸ்ட் கோச்கள், பத்துப் பன்னிரண்டு கார்கள், சில குதிரை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. அவர் தங்கியிருப் பதை ஒட்டி அந்த இடம் ஒரு க்ஷேத்திரமாகி இருந்தது. அந்தப் பெரிய மாந்தோப்பில் நடுவாக இருந்த ஒரு தாமரைப் பொய்கையின் கரையில் சிறுகுடிசை போன்ற பர்னசாலை ஒன்றில் அவர் தங்கியிருந்தார். கோயில் கர்ப்பக்கிருஹத்தில் இருப்பது போல் அந்த இடத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/237&oldid=579953" இலிருந்து மீள்விக்கப்பட்டது