பக்கம்:துளசி மாடம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 துளசி மாடம்


சுற்றித் துளசியும், கர்ப்பூரமும் சந்தனமும்- நெய்யும் கலந்த வாசனை நிலவியது. ஆணும் பெண்ணுமாக நிறைய பக்தர்கள் கையில் பழத் தட்டுக்களுடன் தரிசனத் துக்குக் காத்திருந்தனர். ரவி கமலியோடு பூர் மடத்து நிர்வாகியைப்போய் பார்த்தான். அவர் பிரியமாக வரவேற்றுப் பேசினார். எங்கே தங்கியிருக்கிறார்கள், எப்போது வந்தார்கள் என்ற விவரங்களை எல்லாம் விசாரித்துக் கொண்டார். தங்கியிருக்கிற இடத்தில் எல்லாம் செளகரியமாயிருக்கிறதா என்றும் கேட்டார். "நீங்கள் சமஸ்கிருதத்திலும், சாஸ்திரங்களிலும் இந்தியக் கலாசாரங்களிலும் நிரம்ப ஈடுபாடுள்ளவராயிருப்பதை அறிந்து பெரியவர்களுக்கு வெகு திருப்தி' என்று நடுவே கமலியைப் பார்த்துத் திடீரென்று ஒரு வாக்கியம் சொன் னார் அவர். தங்களைப் பற்றித் தாங்கள் அங்கே வருவ தற்கு முன்பே நிறையப் பேச்சு நடந்திருப்பதை ரவியும் கமலியும் அதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. பெரிய வர்கள் சாதுர் மாஸ்ய விரதம் இருப்பதால் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுப் புரிந்து கொள்வார்கள் என்பதையும் அவர்கள் எதுவும் பேச மாட்டார்கள் என்பதையும் கமலிக்கு விளக்கினார் அவர். மொட்டைக் கடிதாசுகள், வக்கீல் நோட்டீஸ்கள் பற்றி அவரும் எதுவும் பேசவில்லை. அவர்களும் பேசவில்லை.

அங்கே தரிசனத்துக்குக் காத்திருந்தவர்களோடு அவர்களும் போய் நின்று கொண்டார்கள்.ஒர் ஐரோப்பிய யுவதி புடைவை குங்குமத் திலகத்தோடு தரிசனத்துக்கு வந்திருப்பது காத்திருந்த மற்றவர்களிடம் சிறிது வியப்பை உண்டாக்கியது. சிலர் ரவியிடம் வியந்து விசாரித்தார்கள். சிலர் கமலியிடமே ஆங்கிலத்தில் விசாரிக்க ஆரம்பித்து அவள் தமிழிலேயே பதில் சொல்லியது கண்டு ஆச்சரியப் பட்டார்கள். கமலியைச் சுற்றி இளம் பெண்கள், மாமி களின் கூட்டம் கூடிவிட்டது.

பெரியவர்கள் பொய்கையில் நீராடிவிட்டுப் படித் துறையிலேயே ஈர ஆடையுடன் ஜபம் செய்து கொண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/238&oldid=579954" இலிருந்து மீள்விக்கப்பட்டது