பக்கம்:துளசி மாடம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 237


ருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். படித்துறை யிலிருந்து அவர் குடிலுக்கு வந்ததும் தரிசனம் கிடைக்க லாம் என்று காத்திருந்தவர்களிடையே பேச்சு நிலவியது

கிழக்கு நன்றாக வெளுத்து மாந்தோப்பில் பறவை களின் குரல்கள் வீச்சுக் குறையத் தொடங்கியிருந்தன. பூர் மடம் நிர்வாகி அப்போது அவர்கள் நின்று கொண்டி ருந்த இடத்தை நோக்கி வந்தார்.

"நீங்க ரெண்டுபேரும் படித்துறைக்கே போயிடுங்கோ. பெரியவா உட்கார்ந்திருந்திருக்கிற படிக்கு ஒரு படியோ, ரெண்டு படியோ கீழே இறங்கிண்டா அங்கேயிருந்தே அவாளோட பேசச் செளகரியமாயிருக்கும்." .

அவர் கூறியபடி அவர்கள் இருவரும் படித்துறைக்கு விரைந்தனர். பொய்கையில் பூத்திருந்த பல செந்தா மரைப்பூக்களில் ஒன்று கரையேறிப் படிக்கட்டில் அமர்ந் திருப்பது போல் கிழக்கு நோக்கித் தேஜோ மயமாக அமர்ந்திருந்தார் அவர் கிழக்கே உதித்துக் கொண் டிருந்த இளஞ்சூரியனின் வரவு படித்துறையில் வீற்றிருந்த இந்த மூத்த ஞான சூரியனைக் காண வந்தது போலிருந் தது. அவர் பாதங்களின் அருகே பழத் தாம்பாளத்தை வைத்துவிட்டுக் கீழே சற்று அகலமாக இருந்த மற்றொரு படியின் அசெளகரியமான குறுகிய இடத்துக்குள்ளேயே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்கள் ரவியும், கமலியும் . .

மலர்ந்த முகத்தோடு, ஆசி கூறுகிற பாவனையில் அவரது வலது கரம் உயர்ந்து தணிந்ததை அவர்கள் காணமுடிந்தது. வெளிநாடுகளில் சுற்றிய பழக்கத்தாலும் அந்த மகானுக்குத் தான் யாரென்று நினைவிருக்குமோ, இராதோ என்ற தயக்கத்தாலும் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன், "சங்கர மங்கலம் விசுவேசுவர சர்மாவின் ஜ்யேஷ்ட குமாரன்..." என்று தொடங்கிய அவனைப் புன்முறுவலுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/239&oldid=579955" இலிருந்து மீள்விக்கப்பட்டது