பக்கம்:துளசி மாடம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 துளசி மாடம்


தென்று ஊர் வம்புகளைத் தெரிந்து கொண்டு வந்து அம்மாவுக்குச் சகலத்தையும் அவ்வப்போது காதில் போட்டுக் கொண்டிருப்பதாகப் பார்வதி வசந்தியிடம் தெரிவித்தாள். -

"புருஷா ஆயிரம் தப்புப் பண்ணலாம். பொம்ம னாட்டி மட்டும் முரண்டு பண்ணி மூஞ்சியைத் துக்கிண்டு. நின்னாள்னா அப்புறம் தனியா அவா எதைச் சாதிச்சுட முடியும் ?"-என்பதுதான் பக்கத்து வீட்டுப் பாட்டி அடிக்கடி காமாட்சியம்மாளிடம் சொல்லும் வாக்கியம் என்பதைத் கூடப் பார்வதியே தெரிவித்தாள். : முரண்டும், அறியாமையும், அசூயையும், கொண்டது. விடாக் குணமுள்ள சில பாட்டிகள்தான் கிராமங்களின் அரசியல்வாதிகளாக இருப்பார்களோ என்று எண்ணி, னாள் வசந்தி. நிச்சயமான கல்யாணங்களைக் கலைப்பது, நெருங்கிப் பழகுகிறவர்களிடையே மனஸ்தாபங்களை உண்டாக்குவது, மறைமுகமாகப் பழி தீர்த்துக் கொள்வது, வதந்திகளைப் பரப்புவது, புறம் பேசுவது, கோள் மூட்டுவது இவையெல்லாம் ஒவ்வோர் கிராமத்தி லும் சில பாட்டிகளின் செயல்களாக இருந்தன. இந்த மாதிரிக் கெட்ட குணமுள்ள பாட்டிகளின் செயல்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் நல்ல சுபாவமுள்ள சில பாட்டிகள்கூட ஒதுங்கி இருந்து விடுவது வழக்கமா யிருந்தது. காமாட்சியம்மாளிடம் தான் பேசிப் பார்த்ததைப் பற்றி சர்மாவிடமும், தன் தந்தையிடமும் விவரங்களைத் தெரிவித்து விட்டாள் வசந்தி. தான் காமாட்சியம்மாளிடம் பேசியதைப் பற்றிக் கமலியிடமோ, ரவியிடமோ, வசந்தி எதையும் விவரிக்கவில்லை. வீணாக அவர்களைக் கலவரப்படுத்த வேண்டாமென்று தான் அதை விட்டிருந்தாள். : வேணுமாமாவைப் பொறுத்தவரை வசந்தி காமாட்சி யம்மாளைப் பார்த்து விட்டு வந்து கூறிய எதுவும் அவரது உற்சாகத்தைப் பாதிக்கவில்லை. கலியான ஏற்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/254&oldid=579970" இலிருந்து மீள்விக்கப்பட்டது