பக்கம்:துளசி மாடம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 துளசி மாடம்


'நீங்க என்ன சொல்றேள் சர்மா? அவனோட' பழகிப் பழகி வர்வர நீங்களே இப்பல்லாம் அவன்' மாதிரிப் பேச ஆரம்பிச்சுட்டேள்...'

'அதில்லே! சமயா சமயங்கள்ளே ஆஸ்தீகாளும் தங்களை அறியாமத் தெய்வத்தை அவமதிச்சுப் பேசிடற துண்டு. அதுவும்கூடத் தெய்வ நிந்தனைதான். நீங்க சொன்னதையும் அதிலேதான் சேர்த்துக்கலாம். நம்ம துவேஷத்தை, நம்ம மெளட்டீகத்தை, நம்ம அஞ்ஞானத்தை நம்மோட பழி வாங்கற மனப் பான்மையை இதுக்கெல்லாம் அப்பாற்பட்ட பரம் பொருள் மேலே ஏத்தி வச்சு அது பழி வாங்கிடும். கண்ணை அவிச்சுப்பிடும், காலை ஒடிச்சிப்பிடும்னெல் லாம் சொல்றது எத்தனை அபத்தம்? வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்னு பகவானைப் பத்தி ஆயிரம் சாஸ்திரங்கள்ளே நீர் திரும்பத் திரும்பப் படிச்சு என்ன பிரயோஜனம் சாஸ்திரிகளே?'- -

எவ்வளவோ அடக்கிக் கொள்ள முயன்றும் 3-fiLDIτ குரலில் கடுமை தொனித்து விட்டது. சாஸ்திரிகள் சர்மாவுக்குப் பதில் சொல்லாமல் கோபத் தோடு நேரே சீமாவையர் வீட்டுத் திண்ணைக்கு விரைந்தார். அங்கே அவர் எதிர்பார்த்தது போல் வம்பர் சபை கூடியிருந்தது. இவர் போவதற்கு முன்பேயே சர்மா எதிர்ப்புத்'தான் அங்கே நடந்து கொண்டிருந்தது. சீமாவையர் அத்தனை பேருக்கும் தாராளமாக வெற்றிலை சீவல் வழங்கிச் சர்மா எதிர்ப்பை உற்சாகப்படுத்தி விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சாஸ்திரி வந்து சொன்னதைத் தொடர்ந்து கூடி யிருந்தவர்களிடம் சீ மா ைவ ய ரே சர்மாவைப்பற்றி மேலும் குறைகூறித் தூபம்போட்டுவிட வசதியாயிருந்தது. 'என்னோட மாந்தோப்பிலே பம்ப்செட் மோட்டாரைக் கொள்ளையடிக்கணும்னு திட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/262&oldid=579978" இலிருந்து மீள்விக்கப்பட்டது