பக்கம்:துளசி மாடம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 துளசி மாடம்


சர்மாவைப் பற்றியோ யாருக்கும் ஒரு சிறிய நல்லபிப் பிராயம்கூட ஏற்பட்டு விடாமல் கவனித்துக் கொள்வதில் ஒ,ாவையருக்கு அளவு கடந்த அக்கறை இருந்த தென்னவோ உண்மை இறைமுடி மணி'யின் கடை, வியாபாரம் எல்லாம் பற்றி ஊர் முழுவதும், மரியாதை யும் நல்லெண்ணமும் பெருகுவதையே அ வ ரா ல் போறுத்துக்கொள்ள முடியாமல் இருந்தது. சர்மாவை யும், இறை முடிமணியையும் கோர்ட்டு, கேஸ் என்று இழுத்தடிப்பதற்கான செலவுகளை இரகசியமாக அகமத் அலிபாய் ஏற்றுக் கொண்டிருந்தார். அகமத் அலிபாயின் கோபத்துக்குக் காரணம் சர்மாவை வீடுதேடி போய்க் கையில் முன்பணத்தோடு கெஞ்சிப் பார்த்தும் கேட்காமல் அவர் அந்த இடத்தை இறைமுடிமணிக்கு விட்டிருந்தார் என்பதுதான். அதே காரணத்தாலும், தொழிற் போட்டி யாலும் தனக்குக் கிடைக்காத இடம் அவருக்குக் இடைத்து விட்டதே என்ற எண்ணத்தினாலும் இறை முடிமணியின் மேலும் அவருக்கு எரிச்சல் ஏற்பட்டி ருந்தது. சர்மாவையும் இறைமுடிமணியையும் அலைக் கழித்துக் கஷ்டப்படுத்துவதற்காகச் சீமாவையருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்கத் தயாரா யிருந்தார் அகமத் அலிபாய்.

கமலி ரவி கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண் டிருந்த போதே ஸப் கோர்ட்டிலிருந்து ஸம்மன் சர்மா வுக்கும் கமலிக்கும் வந்து சேர்ந்திருந்தது. கமலி போய்த் தரிசனம் செய்திருந்த சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கோவில்களின் தூய்மை கெட்டு விட்டதால் அவற்றுக்கு மறுபடி உடனே சம்ப்ரோட்சனம் செய்ய ஆகிற செலவு என்று ஒரு கணக்குப் போட்டுப் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கோரி வழக்குத் தொடுத்திருந்தார்கள். வழக்குத் தொடுப்பதற்கான செலவு, தூண்டுதல் எல்லாம் மோ னவயர், அகமத் அலிபாய் ஆகியோருடையது என்றா லும், ஒவ்வொரு கோவிலுக்கும் சம்ப்ரோட்சணம், யாக சாலை, கும்பாபிஷேகம், மண்டலாபிஷேகச் செலவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/264&oldid=579980" இலிருந்து மீள்விக்கப்பட்டது