பக்கம்:துளசி மாடம்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 துளசி மாடம்


"என்ன பண்றது சர்மா ? விபூதிப் பூச்சு, தெய்வ நம்பிக்கைங்கிற வேஷம் எல்லாமாச் சேர்ந்து சீமாவையர் முதல் நம்பர் ஆசாரக்கள்ளனாயிருந்தும் அவரை நல்ல வனா உலகத்துக்குக் காட்டிடறதே ?"

"யாருக்கும்.பயப்படாமே மனப்பூர்வமா உள்ளதைச் சொல்லணும்னாத் தேசிகாமணியை ஆஸ்திகனா ஒத்துக்கலாம். சீமாவையரைத்தான் உண்மையான நாஸ் தீகன்னு சொல்லணும். வேஷம் போடறவனை விட வெளிப்படையானவன் யோக்கியன். சீமாவைய ருக்குச் சாஸ்திரம், புராணம்,சம்ப்ரதாயம், ஒரு மண்ணும் தெரியாது. தெரியறதாக வேஷம் போடறார். ஒண்ணைக் குறை சொல்லிப் பேசறதுன்னாக்கூட அதைப்பத்தி முழு விவரமும் தெரிஞ்சுக்காமப் பேசப் படாதுன்னு அத்தனையையும் முறையாக் கத்துண்டு ஒண்ணுமே தெரியாத பாமரன் மாதிரி நடந்துக்கற தேசிகாமணி எவ்வளவோ சிலாக்கியம்பேன்..."

"முடிஞ்சா சீமாவையரைக்கூட இதிலே சிக்க வைச்சுப் பாக்ஸ்லே ஏத்திக் குறுக்கு விசாரணை பண்ணணும்னு எனக்கு ஆசை.”

- "அவர்தான் நேரே வரவே மாட்டார். மத்தவாளைத் தூண்டிவிட்டு ஆழம் பார்க்கறதே அவர் வழக்கம். மத்தவாளுக்குக் கெடுதல் பண்றதையே ஒரு ஆர்ட்டா டெவலப் பண்ணிண்டவர் அவர். அவரோட பக்தி விசுவாசம் எல்லாமே வெறும் பாசாங்கு.'

"கமலி கோயிலுக்கு வந்ததாலே கோயிலோட சுத்தம் கெட்டுப் போச் சுன்னு கேஸ் போட்டிருக்கிற திலிருந்தே அது தெரியலியா ?"

"சும்மா பேருக்குத்தான் கமலி மேலே கேஸ் போட் டிருக்காளே ஒழிய உண்மையிலேயே அவா கோபமெல் லாம் என் மேலேயும் தேசிகாமணி மேலேயும்தான். என்னைச் சிரமப் படுத்தனும், எனக்குத் தொந்தரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/268&oldid=579984" இலிருந்து மீள்விக்கப்பட்டது