பக்கம்:துளசி மாடம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 271


வக்கீல் என்ன சொல்லிக் குடுக்கறாரோ அதை அங்கே வந்து ஒப்பிக்கிற பாவத்தைப் பண்ணனும் சுவாமி! நீங்க எங்களைத் தப்பாப் புரிஞ்சுக்கப்படாது. எங்களைத் தொந்தரவு பண்ணி நிர்ப்பந்தப் படுத்தறா வேற வழியே இல்லை.'

-இப்படி வருத்தப்பட்ட மூத்தவரான அந்த ஒர் அர்ச்சகரைத் தவிர உடன் வந்திருந்த மற்ற இரு அச்சகர் களிடமும் சில கேள்விகள் கேட்டுப் பதில் சொல்ல வைத்தார் வேணுமாமா. அப்புறம் பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றினார்.

'நான் உங்களை எல்லாம் வரச் சொன்னது இதைப் பத்திப் பேசறதுக்கில்லே. இவ ஏதோ ரெண்டு மூணு பிராமணாளுக்கு வஸ்திர தானம் பண்ணனும்னா, அதுக் காகத்தான் உங்களை எல்லாம் வரச்சொல்லி அனுப்பி னேன்'-என்று கமலியைக் கூப்பிட்டு ஜாடை காட்டி னார். மூன்று பெரிய பிளாஸ்டிக் தட்டுக்களில் தயாராக வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் எடுத்து வைக்கப்பட்டிருந்த கோடி வேஷ்டி அங்கவஸ்திர செட்டுக்களைக் கமலியே அவர்கள் ஒவ்வொரு வருக்காகக் கொடுத்துவிட்டு மிகவும் பல்யமாகக் குனிந்து அவர்களை வணங்கினாள் அவர்களும் ஆசீர்வாதம் செய்தார்கள், அவர்கள் சென்ற பின் விளக்கு வைத் திருந்த மனைப் பலகைக்கு அடியிலிருந்து காஸ்ெட் ரெக்கார்டரை எடுத்து "ரீ வைண்டிங் பட்ட'னை அமுக்கி ரீவைண்ட் செய்து மறுபடி போட்டுப் பார்த்ததில் எல்லாம் கச்சிதமாகப் பதிவாகி இருந்தது. கேஸ் விசாரணைக்கு வருவதற்கு முன்பே மற்ற சாட்சிகளை யும் வரவழைத்துப் பேசிவிட்டார் வேணுமாமா.

ဝါဒီ့ ઈ, ဝါို

விசாரணை நாள் வந்தது. ஏற்கெனவே தினசரிப் பத்திரிகைகளில் பிரமாதப்படுத்தப்பட்டுத் தடபுடலாகி இருந்ததனால் அன்று சப்-கோர்ட்டில் ஏகக்கூட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/273&oldid=579989" இலிருந்து மீள்விக்கப்பட்டது