பக்கம்:துளசி மாடம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 273


"கமவியைப் போன்ற ஓர் அந்நிய நாட்டுப் பெண்ணைச் சர்மா தன் வீட்டிலே தங்க வைத்துக் கொண்டதிலேயோ அவர் உதவியுடன் அவள் இந்து ஆலயங்களில் தரிசனத்துக்குப் போனதிலேயோ சட்டப் படி என்ன தப்பு ?"

"கமலி அந்நிய நாட்டைச் சேர்ந்தவள் மட்டுமில்லை. அந்நிய மதத்தைச் சேர்ந்தவள்’-என்று எதிர்த்தரப்பு வக்கீல் குறுக்கிட்டார்.

"இதை நான் ஆட்சேபிக்கிறேன். கமலி எந்த அந்நிய மதத்தையும் சேர்ந்தவள் இல்லை அவள் பல ஆண்டு களாக இந்து மதத்தையும் இந்து கலாசாரத்தையும் பழக்கவழக்கங்களையுமே அனுஷ்டித்து வருகிறாள்."

வேனுமாமா இவ்வாறு கூறியவுடன் கமலி அந்நிய மதத்தினள் இல்லை என்பதற்கும், இந்துப் பழக்க வழக்கங்களையே அவள் அனுசரித்து வருகிறாள் என்பதற்கும் போதிய சாட்சியங்கள் வேண்டும் என்று எதிர்த் தரப்பு வக்கீல் கேட்டார். -

சாட்சியங்கள் இப்போதே தயார் என்றும் கோர்ட் டார் விரும்பினால் அவர்களை ஒவ்வொருவராக ஆஜர்படுத்த முடியும் என்றும் வேணுமாமா நீதிபதியை நோக்கிக் கூறினார். நீதிபதி சாட்சியங்களை ஆஜர்ப் படுத்தி நிரூபிக்குமாறு கோரவே முதல் சாட்சியாகச் சங்கரமங்கலம் செயிண்ட் ஆண்டனீஸ் ੀ ੈ।" பாதிரியாரை அழைத்தார் வேனுமாமா.

கமலி என்ற அந்தப் பிரெஞ்சு யுவதியை ஒருநாள் கூடத் தான் சர்ச்சில் பிரேயருக்காக வந்து பார்த்ததில்லை என்றும் மாறாகப் புடவை குங்குமத் திலகத்துடன் பிள்ளையார் கோயில், சிவன் கோயில் வாசல்களில் அடிக்கடி பார்த்திருப்பதாகவும் பாதிரியார் சாட்சி சொன்னார் . எதிர்த் தரப்பு வக்கீல் பாதிரியாரிடம்

து-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/275&oldid=579991" இலிருந்து மீள்விக்கப்பட்டது