பக்கம்:துளசி மாடம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 துளசி மாடம்


'இந்து கலாசாரத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறி மார் தட்டிக் கொள்ளும் ஜாதி இந்துக்களைவிட மெய் யான இந்துவாக இருப்பவள் கமலி. என்னைப் போல் ஜாதிமத நம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் இல்லாத வர்கள் நடத்தும் பகுத்தறிவுப் படிப்பகத்தில் வந்து பேசும்போதுகூட எங்கள் ஆட்சேபணையையும் பொருட் படுத்தாமல் தனக்குத்தானே கடவுள் வாழ்த்துப் பாடி விட்டுத்தான் அவள் தன் பிரசங்கத்தைத் தொடங் கினாள்"- என்பதாகத் தன் சாட்சியத்தைக் கூறினார் இறைமுடிமணி.

இதில் எதையும் குறுக்கு விசாரணை செய்ய முடி யாமல் போயிற்றே என்று எதிர்த்தரப்பு வக்கீலுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இறைமுடிமணியின் சாட்சியம் முடிந்தபின் வேணுமாமா தன் வாதத்தை முடித்துக் கூறும்போது மேலும் விவரித்துப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவற்றை அழகாகவும் கோவையாகவும் நிரல்படவும் எடுத்துரைத்து விவாதித் தார் அவர். -

"இந்து ஆசார அனுஷ்டானங்களுடன் கோவிலின் புனிதத் தன்மைக்கோ சாந்தித்தியத்துக்கோ எந்தப் பாதிப்புமில்லாமல் ஆலயங்களில் தரிசனத்துக்காகச் சென்றிருக்கும் என் கட்சிக்காரரை வம்புக்காக்க அவதூறு செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடுதான் இந்த வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதே ஒழிய வழக்குத் தொடுத்திருப்பவர்களின் கோரிக்கையில் எந்த நியாயமுமில்லை. சட்ட விரோதம் என்ற பேச்சுக்கே இதில் இடம் கிடையாது, மறுபடி சம்ப்ரோட்சணம் பண்ணிய பின்புதான் சுத்தமாக வேண்டுமென்ற அளவுக்குக் கோவில்களில் இப்போது எந்த சுத்தக் குறை பாடும் நடந்து விடவில்லை என்பதை வற்புறுத்திக் கூற விரும்புகிறேன்.

"தவிர நேற்றும் இன்றும் அதே கோவில்களில் முறைப் படி பூஜை புனஸ்காரம், பொது மக்களின் தரிசனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/278&oldid=579994" இலிருந்து மீள்விக்கப்பட்டது