பக்கம்:துளசி மாடம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 27


'பெரிய பணக்காரக் குடும்பத்துப் பொண்ணுன் னியே...? தன்னோட .ெ பா எண் ணு அந்தஸ்துக்குக் குறையாத இடத்துக்குப் போய்ச் சேரனும்னாவது அப்பாவுக்கு அக்கறையோ கவலையோ இருக்காதா...?" "நம்மூர்ப் பணக்காரா மாதிரி இருபத்து நாலுமணி நேரமும் தாங்க பணமுள்ளவா, தனி அந்தஸ்துள்ளவா, தனி ஜாதி, தனி ரகம்னே நினைச்சிண்டிருக்க அங்கே அவாளுக்கெல்லாம் தெரியாது. பணம்கிறதை ஒரு வசதியா நினைப்பாளே ஒழிய வரப்பிரசாதமா நினைச்சுக் கர்வம் பிடிச்சு அலையமாட்டா, நீக்ரோவைக் காதலிச்சு வெற்றி க ண் ட பணக்காரக் குடும்பத்து வெள்ளைப் பெண் உண்டு. அந்தக் காதல் பெற்றோர் களுக்கும் மக்களுக்கும் எந்த விரோதத்தையும் உண்டு பண்ணினதில்லை. இதிலே ஒளிவு மறைவுகள், இலை மறைவு, காய் மறைவு எதுவும் கிடையாது. இவனை நான் காதலிக்கிறேன்' என்று தன் தாய் தந்தையிடம் தன் காதலனை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தும் துணிவும் நேர்மையும் ஒரு பெண்ணுக்கு அங்கே உண்டு. கமலியைப் பொறுத்த மட்டிலே இண்டியன் ஸ்டடீஸ் ஃபேகுல்டியில் ரவியிடம் இண்டாலஜி படிக்க வந்த போது அவளாகவே விரும்பி ரவியால் வசீகரிக்கப்பட்டுத் தான் அவனைக் காதலிச்சிருக்கா...இதை அ வளே எங்கிட்ட மனசு விட்டுச் சொன்னா மாமா..."

"இனிமே யாரைச் சொல்லி என்ன பிரயோஜனம் அம்மா...? நான் என் தலையிலேதான் செருப்பாலே அடிச்சுக்கணும். ரவியை நான் பிரான்சுக்கு உத்தியோகம் பார்க்கப் போகவே விட்டிருக்கப்படாது..."

"நீங்க சொல்றது வேடிக்கையாகத்தான் இருக்கு சர்மா...! இன்னும் கொஞ்ச நாழி போனா அவனை நான் பெத்தே இருக்கப்படாது'ன்னு கூட வருத்தப் படுவேள் போலிருக்கே '-என்று சிரித்துக் கொண்டே மெல்லக் கேட்டார் வேணு மாமா. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/29&oldid=579745" இலிருந்து மீள்விக்கப்பட்டது