பக்கம்:துளசி மாடம்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 துளசி மாடம்


வருஷத்துக்கு மின்னாடி இந்துார்ச் சீமாவையர் மடத்துச் சொத்தைக் கையாடிப்பிட்டுப் பெரியவாளைப் பார்த்துத் "தாராள மனசோட rமிக்கனும்னு" போய் நின்னப்போ அவர் மெளனமாயில்லாமே இருந்தும் கூட ஒரு வார்த்தை கூடப் பேசாமல் "போயிடு!"ன்னு கையை மட்டும் மறிச்சு அசைச்சுப் போகச் சொல்லிட்டாராம். அப்பேர்க் கொத்தவர் இவாகிட்ட இப்படி பிரியமா இருந்தார்னா அதுவே என்னமோ விசேஷம் இருக்கணும்டி காமு ..."

"எங்கிட்டயும் வத்து சொன்னா... ஆனா நான் அதை நம்பலே பெரியம்மா! வேற யாரும் சொல்லலே... இந்தப் பிராமணரே தான் சொன்னார் என் மனசை மாத்தறதுக் காகக் கதை கட்டி அளந்து விடறார்னுதான் நெனைச் சேன், மடத்து மானேஜரே லெட்டர் போட்டிருக்கார்... படிச்சுக்காட்டறேன்..கேளு'ன்னார், அதையும் நான் கேட்கல்லே."

“பொய்யாயிருக்காதுடீ. நடந்திருக்கும்னு தான் தோண்றது. நம்மூர் மனுஷா அத்தனை பேர் வந்து வாய் ஓயாமக் கொண்டாடறாளே?. பொய்யாயிருந்தா அப்பிடிக் கொண்டாடுவாளோடி?"

காமாட்சியம்மாள் மெளனத்தில் ஆழ்ந்தாள். மேற் கொண்டு பெரியம்மாளிடம் என்ன பேசுவதென்றே அவளுக்குத் தெரியவில்லை. கமலிக்கும் ரவிக்கும் கலியாணம் ஏற்பாடாகியிருப்பது முதல் சகலத்தையும் தெரிந்து கொண்டுதான் பெரியம்மா தன்னிடம் இப்படிப் பேச்சுக் கொடுத்து ஆழம் பார்க்கிறாளா, அல்லது சாதாரணமாகத் தனக்குத் தெரிந்திருப்பதைத் தெரிவிக் கிறாளா என்று காமாட்சியம்மாளால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது அப்போது. பெரியம்மா அதற்குள் தன் பழைய கேள்வியையே இரண்டாம் முறையாகத் திரும்பவும் கேட்டுவிட்டாள். -

"என்னடி பதிலே சொல்ல மாட்டேங்கறே? அந்த வெள்ளைக்காரி இங்கே இருக்காளோ? ஊருக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/296&oldid=580012" இலிருந்து மீள்விக்கப்பட்டது