பக்கம்:துளசி மாடம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 295


திரும்பிப் போ யா ச் சோ ? உன்னைத் தாண்டி கேழ்க்கறேன்..."

"இன்னம் போகல்லே பெரியம்மா! வடக்குத் தெருவிலே வேணுமாமா ஆத்திலே போய்த் தங்கியிருக்கா. அந்த மாமாவோட பொண் வசந்திக்கும் இவளுக்கும் ரொம்ப சிநேகிதம்! பம்பாயிலேருந்து அவளும் பொறப் பட்டு வந்திருக்கா. எங்கேயாவது போகட்டும். இப்போ இங்கே தொல்லையில்லாம நிம்மதியாயிருக்கு"-இந்த உரையாடல் இதற்கு மேல் நீளாமல் கவனித்துக் கொள்ளவே காமாட்சியம்மாள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால் தொடர்ந்து பெரியம்மாவை அவளால் அப்படித் தவிர்த்துவிட முடியவில்லை.

இரண்டு நாள் கழித்துப் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி, “ஏண்டி காமு! நீ எங்கிட்ட ஒரு வார்த்தைகூடச் சொல்லலியேடி? கோர்ட்டிலே கேஸ்" நடக்கறதாமே! ஊரெல்லாம் பேசிக்கிறாளே? உங்காத்துக் காரர் சாட்சி சொன்னாராம். உன் பிள்ளை சாட்சி சொன்னானாம்"-என்று பெரியம்மாவையும் வைத்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தபோது தவிர்க்க முடியாமல் கமலியைப் பற்றிய பேச்சு வந்து விட்டது. காமாட்சி யம்மாளே பாட்டியிடம் அதுபற்றி விசாரித்தாள்: "அது என்ன கேஸ் பாட்டி! எனக்கொண்ணுமே தெரியாது. இப்போ இந்தாத்திலே இதெல்லாம் யாரும் வங்காதிலே போடறதும் இல்லே..." -

“என்னமோ அந்த வெள்ளைக்காரப் பொண்ணு நம்ம கோவில்லே எல்லாம் நுழைஞ்சதாலே கோவிலோட சாந்நித்யம் கெட்டுப் போச்சு, மறுபடி கும்பாபிஷேகம் பண்ணியாகணும்னு ஊர்க்காரா பணம் கேட்டுக் கேஸ் போட்டிருக்காளாமே? அது செருப்புக் காலோட கோவி லுக்குள்ளே நுழைஞ்சுதாமே?" .

"மத்தது எல்லாம் எப்பிடியோ எனக்குத் தெரியாது பாட்டீ? ஆனாக் கமலி செருப்புக் காலோட கோவில்லே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/297&oldid=580013" இலிருந்து மீள்விக்கப்பட்டது