பக்கம்:துளசி மாடம்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 துளசி மாடம்


இந்த உரையாடலை இதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மா இப்போது மெல்லக் குறுக்கிட்டாள் :

“என்னடி காமு பாட்டி ஏதோ கலியாணம்கறாளே? என்னதுடீ ?”

முதலில் காமாட்சியம்மாள் சிறிது தயங்கினாள். அப்புறம் எதையும் மறைப்பதைவிட உண்மை பேசுவது நல்லதென்று, பெரியம்மாவிடம் எல்லா விவரமும் சொல்லித் தன் மனஸ்தாபத்தையும் கூறிவிட்டாள். இந்தக் கலியான ஏற்பாடு காரணமாகவுே தனக்கும் தன் கணவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமற் போய் விட்டது என்றும் கூறினாள் காமாட்சியம்மாள்,

'கலி முத்திப்போச்சு அதுனாலேதான் இப்பிடி எல்லாம் நடக்கறது. டி.'-என்றாள் பெரியம்மா.

காமாட்சியம்மாள் அதற்குப் பதில் எதுவும் சொல்ல வில்லை. . .

'உன் பிள்ளை ரவிக்குத்தான் புத்தி இப்பிடிப் போச்சுன்னா சகல சாஸ்திரமும் வேதமும் படிச்ச உங்காத்துக்காரருக்கு ஏண்டி இப்பிடிப் புத்தி போச்சு ம '.விட்டுத் தள்ளுங்கோ... இனிமே அதைப் பத்தி நாம பேசிப் பிரயோஜனமில்லே பெரியம்மா, நாம சொல்வி இங்கே யாரும் கேக்கறவா இல்லே.

இதைச் சொல்லும்போது காமாட்சியம்மாளுக்குத் தொண்டை கமறியது, குரல் கரகரத்து நைந்தது. உணர்வும் சொற்களும் கலந்து குமுறின. கண்களில் ஈரம் பளபளத்தது.

வியாகரண சிரோமணி குப்புசாமி சர்மாவோட வம்சத்திலே இப்பிடி ஒண்ணு நடக்கணும்னு தலையிலே எழுதி இருக்கு...கிரகசாரம் தான்... போ..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/300&oldid=580016" இலிருந்து மீள்விக்கப்பட்டது