பக்கம்:துளசி மாடம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 29


இந்திய வாழ்வின் சிறப்பு என்பதாக அவாள்ளாம் நினைக்கிறா...இந்து அவிபக்த குடும்பம்ன்னு நாம் சொல்றோமே--இந்தக் கூட்டுக் குடும்ப அமைப்புஇதன் பந்த பாசங்கள் எல்லாம் அவாளுக்குப் புதுமை. அவா கண் காணவே நாம அப்பாவும், பிள்ளையும் எலியும் பூனையுமா அடிச்சிண்டு நிக்கப்படாது."

இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, தெருப்பக்கம் பார்த்தவாறே நாற்காலியில் அர்ைந்திருந்த வசந்தி, 'மாமா! உங்க பொண் பாரு உங்களைத் தேடிண்டு வரா" என்று சர்மாவிடம் கூறினாள். சர்மா தெருப்பக்கம் திரும்பினார். வசந்தி எதிர்கொண்டு போய்ப் பாருவை அழைத்து வந்தாள்.

"அப்பா! அந்தப் பூமிநாதபுரம் மாமா தேடி வந்தா. இன்னிக்கு லக்கினப் பத்திரிகை எழுதணுமாம். ரெடியா இருக்கச் சொன்னார். இன்னம் ஒரு மணி நேரத்துலே வந்து அழச்சிண்டு போறாராம்."

"யாரு ராமசாமியா...... வந்திருந்தான் ? ஒகே...? இன்னிக்குச் சாயரட்சை பூமிநாதபுரம் நிச்சயதார்த்தத் துக்குப் போகனும்கிறதையே மறந்துட்டேன்."

"இதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப்படlர். பூமிநாத புரம் என்ன இங்கேருந்து அம்பது மைலா, அறுபது மைலா...? அகஸ்திய நதிப் பாலத்தைத் தாண்டினா அக்கரையிலேதானே இருக்கு...? கூப்பிடு தாரம். சூரியன் மலைவாயிலே வி ழ ற ப் போ புறப்பட்டீர்னாப் போறுமே..." என்றார் வேனுமாமா.

சர்மாவின் பெண் பார்வதி பாவாடை தாவணி அணிந்திருந்தாள். பன்னிரண்டு பதின்மூன்று வயதுக் குள்ளேயே அதைவிட இரண்டு மூன்று வயது அதிகம் மதிக்கிற மாதிரி ஒரு வளர்த்தி. துறுதுறுவென்று களை யான முகம். எச்சில் விழுங்கினால் கழுத்தில் தெரியும்’என்பார்களே அப்படி நிறம். கருகருவென்று மின்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/31&oldid=579747" இலிருந்து மீள்விக்கப்பட்டது