பக்கம்:துளசி மாடம்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 317


யம்மாள் விரும்பவில்லை என்று தெரிந்தது. சிறிது நேரம் கழித்து ஆவலை அடக்க முடியாமல் காமாட்சியம்மாளே கலியாணத்தைப் பற்றிப் பாட்டியிடம் ஏதோ விசாரித் தாள்.

'உங்காத்திலே தங்கியிருந்துதே அந்த வெள்ளைக் காரப் பொண்தானா இதுன்னு நம்பவே முடியலேடி காமு! அப்பிடி அலங்கரிச்சு நம்ம கல்யாணப்பொண்களை மாதிரி மணையிலே கொண்டு வந்து உட்கார்த்தி யிருக்கா’-என்று பாட்டி கூறியதைக் கேட்டுக் காமாட்சி யம்மாளுக்கு உள்ளுறப் போய்ப் பார்க்க வேண்டும்போல ஆசையாயிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள வில்லை. முத்து மீனாட்சிப் பாட்டியும், பெரியம்மாவும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து தயங்கிப் பேசாமல் இருந்தாள் காமாட்சியம்மாள். ஆனால் பாட்டி பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தாள். -

'உள்ளூர் வாத்தியார் ஜம்புநாத சாஸ்திரி இந்தக் கலியாணத்துக்குப் புரோகிதரா இருக்கமாட்டேனுட்டா ராம். இன்னிக்கு நிறையப் பணம் கெடைக்கும்னு இதுக்கெல்லாம் வந்து நின்னுட்டேன்னா நாளைக்கி ஊர்லே நாலு பெரிய மனுஷா நல்லது கெட்டதுக்கு என்னை மதிச்சுக் கூப்பிடமாட்டான்னு ஒதுங்கிட்டா ராம். அப்புறம் வேணுகோபாலன் நெறையப் பணம் செலவழிச்சு மெட்ராஸ்லேருந்து யாரோ ஒரு புது வாத்தியாருக்கு ஏற்பாடு பண்ணினானாம். அந்தப் புது வாத்தியார்தான் இப்ப எல்லாம் பண்ணி வைக்கிறா ராம். தானங்கள் தட்சிணைகள் வாங்கறதுக்குக்கூட உள்ளுர் வைதீகாள் யாரும் போகல்லையாம். ஆனா வெளியூர்லேருந்து நெறைய வைதீகாள் வந்திருக்கா ளாம்...என்னதான் கோர்ட்டிலே அந்தப் பிரெஞ்சுப் பொண்ணு நாம மனுஷாளை விடச் சுத்தமானவள்னு ஜட்ஜ் தீர்ப்புச் சொல்லி விட்டாலும், உள்ளுர் வைதிகாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/319&oldid=580035" இலிருந்து மீள்விக்கப்பட்டது