பக்கம்:துளசி மாடம்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 துளசி மாடம்


'விசாரியுங்கோ. அன்னிக்கி எல்லாரும் இங்கேதானே வருவா...நாம தடுக்க முடியாதே... அவா வீடு, அவா வாசல், நாம என்ன பண்ண முடியும் ?”

'அதுவும் அப்படியா சமாசாரம் ? எனக்கு அது நெனைவே இல்லையே.டீ ?" -என்றாள் பெரியம்மா. அன்று மாலையிலேயே முத்துமீனாட்சிப் பாட்டி அந்தத் தகவலை விசாரித்துக் கொண்டு வந்து சொன்னாள் :

"பாலிகை கரைச்ச மத்தா நாள் கிருஹப் பிரவேசத் துக்கு ஏத்ததா இருக்காம்டி காமு! அதனாலே அன்னிக்கிக் காலம்பர ஆறு மணியிலேருந்து ஏழரை மணிக்குள்ள ஒரு முகூர்த்தத்திலே இங்கே கிருஹப் பிரவேசத்துக்காக வரா ளாம். நீ உடம்பு செளகரியமில்லாமப் படுத்துண்டுட்ட தாலே சமையல் மத்ததுக்கு எல்லாம் அவாளே மனுஷாளை இங்கே முன்கூட்டியே அனுப்பிச்சுடுவான்னு நினைக்கிறேன்" என்று காமாட்சியம்மாள் மனத்தில் வெறுப்பை வளர்க்க நினைத்துப் பேசினாள்.

"கிருகப் பிரவேசத்துக்கு மட்டும் ஏன் இங்கே தேடிண்டு வரணும்டி ? அதையும் அங்கேயே எங்கேயா வது பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே ? சாஸ்திரப் படி புள்ளையாத்திலேதான் பண்ணனும்னு இவாளுக்கு என்னடி நிர்ப்பந்தம் வந்தது?" என்று கிராமத்திலிருந்து வந்து தங்கியிருந்த பெரியம்மா குறுக்கிட்டுச் சொன்ன போது காமாட்சியம்மாள் அதை அவ்வளவாக வரவேற் கவோ, இரசிக்கவோ இல்லை என்று தெரிந்தது.

32

காமாட்சியம்மாளின் அந்தரங்கத்தில் இந்தக் கலி யாணம், இதன் வைபவங்கள், இது தொடர்பான கிருஹப் பிரவேச முகூர்த்தம் எல்லாவற்றின் மேலும் வெறுப்புத் தான் நிரம்பிக் கிடக்கிறதென்று தாங்களாகவே கற்பித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/322&oldid=580038" இலிருந்து மீள்விக்கப்பட்டது