பக்கம்:துளசி மாடம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 துளசி மாடம்


"ஆயிரமிருந்தாலும் நல்லது கெட்டதுலே விட்டுக் குடுத்துட முடியுமோ? நம்மாத்துப் பிள்ளை நம்மாத்துக் கலியாணம்"

婚站*

இந்த மாதிரிச் சமயத்துலே விட்டுக் குடுத்து முகத்தை முறிச்சுண்டுட்டா ஊரிலே நாலு பேர் நாலு தினுசாப் பேசறத்துக்கு எடமாயிடுமோன்னோ?"- இது

பெரியம்மா.

"நீங்க ரெண்டு பேரும் சித்தே பேசாமே இருங்கோ! எனக்கு மூளையே கொழம்பிப் பைத்தியம் பிடிச்சிடும் போலே இருக்கு பாட்டி!" என்று அழுகைக்கிடையே இருவரையும் வேண்டிக் கொண்டாள் காமாட்சியம்மாள். அவளை அவர்களால் அப்போது உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் என்ன மனப்போக்கில் இருக்கிறாள் என்பதை அறிய அவர்கள் செய்த எந்த முயற்சியும் பவிக்கவில்லை

நாளைக்கு இரவு பாலிகை கரைக்கிறார்கள். நாளன்றைக்குப் பொழுது புலர்ந்தால் கிருஹப் பிரவேசம். காமாட்சியம்மாள் என்ன நினைக்கிறாள் என்பது யாருக்கும் புரியாத புதிராயிருந்தது. அவள் முகத்தில் தெம்பும் இல்லை. உடலில் சக்தியும் கிடையாது. கண் களில் அழுகையும் நிற்கவில்லை. யாரிடமும் மனம் விட்டு அவள் பேசவும் இல்லை.

கிருஹப்பிரவேசத்திற்கு முதல் நாளே முத்து மீனாட்சிப்பாட்டி, "நல்ல காரியத்திலே வெள்ளைப் புடவைக்காரி அங்கே நின்னா இங்கே நின்னான்னு இந்தாத்திலே எனக்குக் கெட்ட பேர் வரப்பிடா துடிம்மா"-என்று காமாட்சியம்மாளிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டுப் போய் விட்டாள். முத்து மீனாட்சிப் பாட்டி போனபின் பார்வதியிடமும் குமாரிடமும், காமாட்சியம்மாளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுத் தெரிந்தவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/324&oldid=580040" இலிருந்து மீள்விக்கப்பட்டது