பக்கம்:துளசி மாடம்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 துளசி மாடம்


"கத்தாதேடி இப்ப எனக்கு ஒண்னுமில்லே... உள்ளே சுவாமி படத்தண்டே தாம்பாளத்திலே ஆரத்தி கரைச்சு வச்சிருக்கேன்...போய் எடுத்துண்டு வா......" என்று மிகவும் தளர்ந்த குரலில் காமாட்சியம்மாளிட மிருந்து பதில் வந்தது.

பறவைகளின் கலவையான எழுச்சிக் குரல்களும், அதிகாலைக் குளிர்ச்சியும் மூன்றாவது வீட்டில் யாரோ ஒரு மூத்த வைதிகர் வேதம் சொல்லிக் கொண்டிருந்த கணிரென்ற குரலும் நாதஸ்வரக்காரரின் பூபாளமுமாக அந்த வைகறையை அதிகம் அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டிருந்தன.

அக்கம் பக்கத்திலும் எதிர்வரிசையிலும் வீடுகளில் எழுந்து வந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். பாருவை ஆரத்திக்காக உஷார்படுத்த முன் கூட்டியே ஒட்டமும் நடையுமாக எதிர்கொண்டு வந்த வசந்தி திண்ணையில் காமாட்சி மாமியைப் பார்த்து வியப்பும் திகைப்பும் அடைந்தாள்.

"என்ன மாமி இது? இந்த உடம்போட நீங்க எதுக்கு இதெல்லாம் வந்து அலட்டிக்கறேள்...? போய்ப் படுத்துக் குங்கோ..."

“எனக்கு ஒடம்புக்கு ஒண்னும் இல்லேடீ...வெள்ளிக் கிழமையும் அதுவுமாய் படுக்கையிலே விழிப்போடப் படுத்திண்டிருக்கப் பிடிக்கலே...வா...இப்பிடி உட்கார்ந் துக்கோ. ஆரத்தியை எடுத்துண்டுவரப் பாரு உள்ளே போயிருக்கா." -

உள்ளேயிருந்து பார்வதி மஞ்சள் நீர்த் தாம்பாளத் தோடு வந்தாள். காமாட்சியம்மாளை வாசலில் பார்த் ததும் எடுத்த எடுப்பில் கலியானப் பெண்ணையும் பிள்ளையையும் வீட்டுக்குள் விடமாட்டேன்' என்று சண்டை போட்டுத் தடுக்கத்தான் அந்த உடல் நிலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/328&oldid=580044" இலிருந்து மீள்விக்கப்பட்டது