பக்கம்:துளசி மாடம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 31


"நீர் சொல்றதெல்லாம் இன்னிக்கு எடுபடாது சர்மா! ஒரே வார்த்தையிலே சுத்த மடிசஞ்'சின்னு உம்மை ஒதுக்கிடுவா!'

"அதுதான் இல்லை! நீங்கதான் அப்பிடிச் சொல்றேள்! நம்மூர்ப் பகுத்தறிவுப் படிப்பகம் இறை முடிமணி இருக்கானே அவனும் இந்த விஷயத்திலே என்னோட ஒத்த அபிப்பிராயம் உள்ளவனா இருக்கான். எதிர்காலத்தை மறந்த-உழைப்பாற்றலை இழந்தவெறும் போலி உல்லாச நிகழ்காலத் திளைப்பு இன்றைய இளைஞர்களிடையே காணப்படுகிறது. அவர்கள் கடின மான உடலுழைப்புக்கும் இலாயக்கில்லாமல், நுணுக்க மான மூளை உழைப்புக்கும் இலாயக்கில்லாமல் ஏனோ தானோ என்று தயாராகிறார்கள். இது அபாய மானது'ன்னு ஒவ்வொரு பிரசங்கத்திலேயும் அவன்

திருப்பித் திருப்பிச் சொல்லுகிறான்."

“யாரு...? தெய்வசிகாமணி நாடார்.தானே? அவருக் கும் உங்களுக்கும் ஒத்த அபிப்பிரர்யம் ஒண்ணு இருக்குங் கறதே ஆச்சர்யமான விஷயந்தான் சர்ம்ா...!"

"அதென்னமோ ஆயிரம் அபிப்பிராய பேதம் இருந் தாலும் சில பொது அபிப்பிராயங்களாலே - நாங்க இன்னும் சிநேகிதத்தோடதான் பழகறோம். இறைமுடி ம்ணி யோக்கியன். நாணயஸ்த்ன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன். பரோபகாரி..."

"உம்மை மாதிரி ஒரு பரம ஆஸ்திகர் அவரை மாதிரி ஒரு தீவிர சுயமரியாதைக்காரரை இத்தனை தூரம் சிலாக்கியமாச் சொல்றதே பெரிய ஆச்சர்யம்தான்...!"

"நா ஸ் தீ கா ள் யோக்கியமுள்ளவாளாயிருக்கக் கூடாதா என்ன...' - - "சரி சரி நீரும் வந்த காரியத்தை மறந்துட்டீர், நானும் பேசவேண்டிய விஷயத்தை மறந்துட்டேன். ஆஸ்திக-நாஸ்தீகத் தர்க்கங்களை இன்னொரு நாள் வச்சுப்போமே...? இப்போ நாம பேச வேண்டியதைப் பேசலாம்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/33&oldid=579749" இலிருந்து மீள்விக்கப்பட்டது