பக்கம்:துளசி மாடம்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 331


மகள் ஆகிவிட்டேனோ அப்புறம் என்னை ஏன் வேறு தேசம் என்று நீங்கள் சொல்லனும் ?"

"இனிமே அப்படிச் சொல்லலேடீ தேசம் எதுவா யிருந்தா என்னம்மா ? பிரியம், பாசம், உபகாரம், மனுஷ்த் தன்மை, சத்யம், சகிப்புத் தன்மை, நியாயம்: சிரத்தைங்கறதெல்லாம் அத்தனை தேசத்துக்கும் ஒண்ணு தான். இந்த தேசத்துக்காராளைவிட இந்த தேசத்து விஷயங்கள்ளே உனக்கு அதிகமான பக்தி சிரத்தை இருக் குன்னு கோர்ட்டிலேயே தீர்ப்பாயிருக்குன்னு எல்லாரும் பேசிண்டா.

“என் ஆசையெல்லாம் வேறொண்னுமில்லே. என் பிள்ளையோட நீ இங்கேயே கிருஹலட்சுமியா இருந்து இந்தாத்துலே பெற்றுப் பெருக்கி விளக்கேத்தனும்கறது தான். இது கலப்புக் கல்யாணம். இங்கே இருக்கறவாபார்க்கறவா- கொறை சொல்லிண்டே இருப்பான்னு தயங்கியோ பயந்தே வேற தேசத்திலேயே நிரந்தரமா இருந்துடலாம்னு நீ நெனைக்கப்படாது. இங்கேயே இருந்து இந்தாத்திலே விளக்கேத்திண்டு வரணும், புருஷா அக்னி சந்தானம் ஒளபாசனம்னு பண்ணி நெருப்பு அணையாமக் காத்துண்டு வர மாதிரி இந்தக் குடும்பத்திலே பொண்டுகளும் தலைமுறை தலை முறையா ஒரே வித்திலேருந்து வளர்ற துளசியைச் சம்ரட்சணம் செஞ்சு பூஜை பண்ணிண்டு வரோம். பூஜை பண்ண மனுஷா இல்லாமல் இத்தாத்துத் துளசி மாடம் ஒரு காலத்திலேயும் வாடப்பிடாது, அதிலே நாள் கிழமைகளில் மட்டுமில்லாமே எல்லா நாள்ளேயும் தீபம் பிரகாசிக்கணும். -

“இங்கே இந்தக் குடும்பத்தோட செளபாக்கியங் களும், லட்சுமி கடாட்சங்களும், விருத்தியும் நாங் s பரம்பரையா சரீர சுத்தத்தோடேயும் அந்தரங்க சுத்தத்தோடேயும் பண்ணிண்டு வர துளசி பூஜை யாலேன்னுதான் எங்களுக்கு நம்பிக்கை. நாங்க நல்ல நாள் தவறாமே விரத நியமம் தப்பாமே துளசி மாடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/333&oldid=580049" இலிருந்து மீள்விக்கப்பட்டது