பக்கம்:துளசி மாடம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 துளசி மாடம்


சர்மா வேணுமாமாவுக் கே நெருங்கி வந்து குரலை äå ன்ேே జ్ఞి 'இந்தப் பிள்ள்ையாண்டான் பண்ணியிருக்கிற கந்தர கோணத்திலே இனிமே என் இபாண்ணுக்கு நல்ல இடத்துலே சம்பந்தம் கிடைக்குமோகிடைக்கர்தோன்னு கடப் புயமாயிருக்கு. குமார்ைப் பொறுத்த மட்டுலே சிவலையில்லை, அவ்ன் ஆண்பிள்ளை, கொஞ்சநாள் கல்யாணம் ஆகாமே இருந்தாக்கூடப் பெரிய் பழி ஒண்ணும் வந்துடாது. தவிர் அவனோட காலேஜ் "தி ஆயத்துக்கு இன்னும் இரண்டு முனுவருஷ் ஆகும். பொண் விஷயம் அப்பிடி இல்லே. ஒரு குடும்பத் இ ஆண்கள் பண்ற ஒவ்வொரு தப்iங் அநதக குடும்புத்திலே கல்யாண்த்துக்கு நிக்கிற பொண் களைன்னா பாதிக்கிறது?" .

"திரும்பத் திரும்பப் பழைய ராமாயணத்துக்கே போlரே...? ரவி என்னமோ பெரிய மகாபாதகத்தைப் பண்ணிட்ட மாதிரியும் அதுனாலே உம்ம குடும்பமே முழு கிடறாப்பிலேயும் பேசறதை முதல்லே விட்டுடும். இது இருபதாம் நூற்றாண்டுங்கறன்த் ஞாபகப்படுத்திக்கனும் நீர். இந்த நூற்றாண்டிலே இரயில் பிரயாணம், விமானப் பிரயாணம், தேர்தல், ஜனநாயகம், சோஷலிஸம் இதெல் லாம்போலக் காதலிப்பதும் சகஜமான விஷயம்."

"இந்தச் சங்கரமங்கலம் மாதிரியும், பூமிநாதபுரம் மாதிரியும் ரெண்டுங்கெட்டான் கிராமங்க்ள்ளே அது இன்னும் சகஜமான விஷயமாகல. விசேஷமா என் குடும்ப பாரம்பரியத்துக்கு ஒட்டாதது அது. அதனாலே தான் படிப்பைப் பாதியிலே நிறுத்தினாலும் பரவாயில் லேன்னு இந்தப் பாருவுக்கு ஒரு நல்ல இடமாகப் பார்த்து உடனே கல்யாணத்தைப் பண்ணிட்டா என்னன்னு தோணறது. அவன் இங்கே அந்தப் பிரெஞ்சுக்காரியோட வந்து கூத்தடிக்கிறதுக்குள்ளே இந்தப் பொண்ணு கல்யாணத்தைப் பன்னி இவளைப் புருஷனோட புக்காத்துக்கு அனுப்பிச்சுட்டா ரொம்பச் சிரேஷ்டமாயிருக்கும். இந்த நிமிஷத்திலே இதுதான் என் மனசிலே படறது." . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/34&oldid=579750" இலிருந்து மீள்விக்கப்பட்டது