பக்கம்:துளசி மாடம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி ஒ 38

'இதென்ன பொம்மைக் கல்யாணமா... ? அல்லது மரப்பாச்சிக் கல்யாணமா...? பச்சைக் குழந்தையைப் போய்ப் படிப்பையும் கெடுத்துட்டு மணையிலே உட்கார்த்தித் தாலி கட்டச் சொல்றேங்கறீரே...? உமக்கு ஈவு இரக்கமே கிடையாதா ஒய் ; கேக்கறேன் ?”

'பால்ய விவாகம் ஒண்ணும் விநோதமில்லியே... ? எனக்கும் அப்படித்தான் கல்யாணம் ஆச்சு. உமக்கும் அப்படித்தான் ஆச்சு..."

“அதனாலே இவளுக்கும் அப்படித்தான் ஆகணும்னு நிர்ப்பந்தமா அல்லது தலையெழுத்தா...?"

"என்னோட பிள்ளையாண்டான் இப்போ பண்ணி யிருக்கிற கூத்தைப் பார்த்து அப்படித் தோனித்துன்லு தானே சொன்னேன்." - -

“அதெல்லாம் ஒண்ணும் தோண வேண்டாம். மேலே ஆகவேண்டிய காரியத்தைக் கவனியும். முதல்லே சுமுகமா அவனுக்கு ஒரு பதில் எழுதும், அப்புறம் அவா ரெண்டு பேரும் இங்கே வந்தால் தங்கறதுக்குத் தகுந்த மாதிரி நீர் சில ஏறபாடுகளைப் பண்ணனும்..." "என்ன பண்ணனும்கறேள்...?" - - "பிரெஞ்சுக்காராளுக்குப் பிரைவஸி ரொம்ப முக்கி யம். மேல் நாட்டுக்காரர் எல்லோருமே பிரைவளியைக் கவனிப்பான்னாலும் பிரெஞ்சுக்காரா ரொம்ப மென்மை யான மனசுள்ளவா... இங்கிதம், நாசூக்கு இதெல்லாம் அதிகம். சங்கரமங்கலம் அக்ரகாரம் நடுத்தெருவிலே இருக்கிற உங்க பூர்வீக வீடோ ராணிமங்கம்மாள் காலத்துத் தர்ம சத்திரம் மாதிரி இருக்கு. உம்ம மனசு மாதிரி ஒளிவு மறைவில்லாம அதுவும் இருக்கு. கீழ் வீட்டில் ஒரே பெரிய கூடம், மச்சும்கூட ஒரு பெரிய ஹால் தான். பாத்ரூம்னு எதுவுமே இல்லே. கிணத்தடிதான் பாத்ரும். நீரோ, மாமியோ கிணத்தடியிலே குளிக்கிற வழக்கமே இல்லே. சூரியோதயத்துக்கு முன்னாடியே

3 سسس التي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/35&oldid=579751" இலிருந்து மீள்விக்கப்பட்டது