பக்கம்:துளசி மாடம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 துளசி மாடம்


"ஒய் சர்மா... ? இந்த மாதிரி சாமார்த்தியப் பேச்சுத் தானே வேண்டாம்கிறேன். எனக்கு இதெல்லாம் தேவைதானா இல்லையான்னு நீர் சர்டிபிகேட்" கொடுக்கறதுக்கு உம்மை நான் கூப்பிட்டுக் காமிக்கலே. நீர் என்ன செய்யணும்னு யோசனை சொன்னா அதைக் காதுலேயே வாங்கிக்காமே வேற என்னென்னமோ பேசlரே ... ?"

சர்மாவும் வேணுமாமாவும் இப்படிப் பேசிக் கொண் டிருப்பதைக் கேட்டபடி அருகில் நின்ற வசந்தி ஒரு யோசனை சொன்னாள்.

"மாமாவுக்கு ஒண்னும் ஆட்சேபணையில்லேன்னாக் கமலியும், ரவியும் கொஞ்ச நாளைக்கி இங்கேயே தங்கிக்கலாம். நான் பம்பாய் திரும்பறத்துக்கும் ஒரு மாசம், ரெண்டுமாசம் ஆகும். அதுவரை கமலிக்கு நானே பேச்சுத் துணையா இருக்கலாம். உங்காத்திலே நீங்களும் வைதீகம், மாமியும் படு ஆசாரம். பார்க்கப் போனா மாமி உங்களைவிடக் கடுமையான வைதீகம்னு சொல்லணும். அத்தனைக்கும் நடுவிலே வர்றவாளையும் சிரமப்படுத்திண்டு, நீங்களும் சிரமப்படறதைவிடச் சுலபமா அவாளை இங்கேயே தங்க வச்சுடலாம்."

இதற்குச் சர்மா உடனே பதில் எதுவும் சொல்ல வில்லை, ஆனால், வேணுமாமா இந்த அருமையான யோசனையைக் கூறியதற்காகத் தம் பெண்ணைப் பாராட்டினார்,

"நல்ல ஐடியா வசந்தி ! இந்த யோசனை எனக்குத் தோணலியே...? பேஷான காரியம்! இங்கேயே அவாளைத் தங்க வச்சுண்டுடலாம், சர்மாவுக்கும் செலவு மிச்சம். இப்போ உடனே கட்டிட வேலை மர வேலைன்னு ஆளைத் தேடி அலையவும் வேண்டாம். என்ன சொல்றீர் சர்மா ? ..." -

சர்மா பதில் எதுவும் சொல்லவில்லை. ஏதோ, யோசனையில் மூழ்கினாற்போல் இருந்தார். அவர் உடனே அந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/38&oldid=579754" இலிருந்து மீள்விக்கப்பட்டது