பக்கம்:துளசி மாடம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 37


வீட்டில் சுரேஷ்"க்குப் போடலாம் என்று எப்போதோ வாங்கி வைத்திருந்த ஒர் ஏரோகிராம் தாளை எடுத்து வந்து சர்மாவிடம் நீட்டினாள் வசந்தி.

"நீங்க இப்போ பூமிநாதபுரம் போகப் போறேள். நாளைக்குப் போஸ்ட் ஹாலிடே. ஏரோகிராம் வாங்கவோ எழுதிப் போஸ்ட் பண்ணவோ முடியாது. இப்பவே ரெண்டு வரி எழுதிக் குடுத்துடுங்கோ மாமா ! நானே அதைப் போஸ்ட் பண்ணிடறேன்."

அவள் குரல் அவரிடம் கெஞ்சாத குறையாக குழைந்தது. முதலில் அவர் தயங்குவதாகப் பட்டது. அப்புறம் வசந்தியின் முகதாட்சண்யத்துக்கு மன்சு இளகினார் அவர்.

"பேனா இருந்தாக் குடும்மா ! நான் கொண்டு வரலை- 3.

வேனுமாமா உடனே தம் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்துச் சர்மாவிடம் கொடுத்தார்.

சர்மாவின் ஆள்ளடங்கிய ஆத்திரமும் கோபமும் அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய வாக்கியங்களிலேயே தெரிந்தன.

"சிரஞ்சீவி ரவிக்கு அநேக ஆசீர்வாதம். உபய rேமோப்ரி, உன் கடிதம் கிடைத்தது. விளம்பரத்தைக் கொடுக்கவில்லை. நிறுத்திவிட்டேன். -

"இங்கு உன் அம்மா, செள. பார்வதி, சிர. குமார் ஆன்ைவரும் செளக்கியம், மற்ற விஷயங்களை நீ வரும் போது நேரில் பேசிக் கொள்கிறேன்'-என்று நாலைந்து வரிகளில் எழுதிக் கையெழுத்திட்டு வசந்தியிடம் கொடுத் தார் சர்மா.

வசந்தி அதை வாங்கிக்கொண்டு “நீங்க இதிலே என்ன எழுதியிருக்கேள் ? கோபமா ஒண்னும் எழுதலியே..?” என்று அவரைக் கேட்டாள். அவ்ரிட மிருந்து சிரித்தபடி பதில் வந்தது. . .

"முதல்லே நீ படிம்மா! அப்புறம் உங்கப்பாட்டக் கொடுத்து அவரையும் படிக்கச் சொல்லு ! உங்களுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/39&oldid=579755" இலிருந்து மீள்விக்கப்பட்டது