பக்கம்:துளசி மாடம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 துளசி மாடம்


கெல்லாம் தெரியக் கூடாத பெரிய ரகசியம் ஒண்ணும் அதிலே நான் எழுதிடலே..."

'நான் படிக்கனும்கிறது இல்லே மாமா ! நீங்க சொன்னாச் சரிதான்..." -

'நீ படீம்மா...நானே சொல்றேனே...படின்னு." அவள் அதைப் படித்துவிட்டுத் தன் தந்தையிடம் கொடுத்தாள். அவரும் அதைப் படித்தார்.

"ஏன் ஒய்? இவ்வளவு செலவு பண்ணி ஒரு ஏர்மெயில் கடிதாசு போடறோம். அதிலே போயி இத்தனை கஞ்சத்தனமா நாலே நாலு வரிதானா எழுதணும் ? அத்தனை தூரத்திலே இருந்து புறப்பட்டு வரேன்னு எழுதியிருக்கிற பிள்ளையாண்டானுக்கு, "உன் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்"னு...ஒரு வரி கொஞ்சம் தாராளமா மனசுவிட்டு எழுதப்படாதா... ?"

சர்மா பதில் சொல்லவில்லை. - "மாமாவைக் கஷ்டப்படுத்தாதீங்கோ அப்பா ! எல்லாம் இவ்வளவு எழுதியிருக்கிறது போறும், சரியாத் தான் எழுதியிருக்கார்."

வேனுமாமாவிடமும் அவர் பெண் வசந்தியிடமும் சர்மா விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டபோது, "அப்போ அவா இங்கே தங்கற விஷயமா என்ன முடிவு பண்றேள்னு யோசனை பண்ணி அப்புறமாச் சொல்லுங்கோ" என்றார் வேணு மாமா.

"சொந்தக் கிராமத்திலே சொந்த அப்பா, அம்மா தங்கை, தம்பியெல்லாம் இருக்கிற கிருஹத்திலே தங்க முடியாதபடி ஒத்தன் வரான்னா-அவன் அப்புறம் எங்கே தங்கினாத்தான் என்ன...? இந்த ஊர்லே நீங்க சொல்ற மாதிரி பாத்ரும் வசதி-தங்கற வசதியோட ஆத்தங் கரையிலே ஹைவேஸ்-பி. டபிள் யூ. டி. பங்களா, மலையடிவாரத்திலே ஃபாரஸ்ட் ரெஸ்ட் ஹவுஸ், எல்லாம் கூட இருக்கே... ?" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/40&oldid=579756" இலிருந்து மீள்விக்கப்பட்டது