பக்கம்:துளசி மாடம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 39


வேனுமாமா இதைக் கேட்டு அயர்ந்தே போனார். ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் மறுபுறம் மகன் மேல் சர்மாவுக்கிருந்த பாசம் புரியும்படி இந்த வாக்கியங்கள் ஒலித்தன. சொந்த மகன் தன்னோடு தங்க முடியாமல் போவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சர்மாவின் மனம் அப்போது தவிப்பது புலப்பட்டது. சர்மா புறப்பட்டுப் போய் விட்டார். "என்னம்மா வசந்தி ? திடீர்னு இப்படிப் பேசிட்டுப் போறார்...?"

"அவர் தப்பா ஒண்னும் சொல்லலே அப்பா. பிள்ளை மேலே இருக்கிற பிரியத்தையும் விட முடியலே. அதே சமயம் ஊர் மெச்சற ஆசார அனுஷ்டானங்களைப் பத்தின பயமும் இருக்கு. இறுதலைக் கொள்ளி எறும்பு மாதிரி மாட்டிண்டு தவிக்கிறார்,"

'சரி முதல்லே லெட்டரைத் தபாலுக்கு அனுப்பு. மனுஷன் ஏதோ பெரிய மனசு பண்ணி இந்த லெட்டரை யாவது எழுதிக் கொடுத்திருக்காரே...'

வசந்தியே அந்த ஏரோகிராமை ஒட்டி ரவியின் பாரிஸ் முகவரியைத் தெளிவாக எழுதி எடுத்துக் கொண்டு தன் கையாலேயே தபாலில் சேர்ப்பதற்காகத் தபாலாபீஸுக்குப் புறப்பட்டாள். வசந்தி பாதி வழி கூடப் போயிருக்க மாட்டாள். எதிரே சர்மாவின் புதல்வி பார்வதி அவசர அவசரமாகத் தன்னை நோக்கி வருவதை அவள் கண்டாள். .

4.

மூச்சு இரைக்க இரைக்க ஓடிவந்த வேகத்திலிருந்து நின்று நிதானித்துக் கொண்டு சர்மாவின் பெண் பார்வதி அப்போது வசந்தியிடம் பேசுவதற்குச் சில விநாடிகள் ஆயின. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/41&oldid=579757" இலிருந்து மீள்விக்கப்பட்டது