பக்கம்:துளசி மாடம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 41


பார்க்கறத்துக்குள்ளேயே நீங்க 'ஏரோகிராமை’ப் போஸ்ட் பண்ணியாச்சுன்னு அப்பாட்டச் சொல்லிட றேன்." -

தபாலாபீஸ் வரை பார்வதியையும் உடனழைத்துச் சென்றே அந்தக் கடிதத்தைப் பெட்டியில் போட்டாள் வசந்தி. தபாலா பீஸ் வாசலில் இருந்தே வசந்தியும், பார்வதியும் அவரவர் வழிகளில் பிரிந்து சென்றனர்.

பார்வதி வீட்டிற்குத் திரும்பிச் சென்றபோது அவள் தந்தை விசுவேசுவரசர்மா பூமிநாதபுரத்துக்குப் புறப் பட்டுப் போயிருந்தார். அம்ம்ா வாசல் திண்ணைப் பிறையில் அந்தி விளக்கு ஏற்றி வைத்து விட்டு உட்கார்ந் திருந்தாள். பிறைக்குக் கீழே திண்ணையில் தண்ணிர் த்ெளித்து அழகாகச் சிறிதாகத் தாமரைப்பூக் கோலம் போட்டிருந்தர்ள் அம்மா. வயதாகியும் கை சிறிதும் நடுங்காமல் அம்மாவால் எப்படி இத்தனை அழகாக அளவாகக் கோலம் போட முடிகிறதென்று பார்வதி ஒவ்வொரு முறையும் அம்மாவின் கோலத்தைப் பார்க்கும் போது ஆச்சரியப்படுவதுண்டு. தாமரைப்பூ, தேர் எதைப் போட முயன்றாலும் கோலம் போடும்போது தனக்குக் கைகோணி விடுவதும், அம்மாவுக்கு அச்சுப் போல் கச்சிதமாக வரைய வருவதும் சேர்த்தே நினைவு வரும் அவளுக்கு. இதற்காக அம்மாவிடம் அவள் பொறாமைப்படுவதுகூட உண்டு. பார்வதி பாத்திரக் கடையில் தகரத் தகட்டில் தாமரைப்பூ போலவும், தேர் போலவும் செய்த கோல அச்சுக்களையும் கோலக் குழலையும் வாங்கப் பணம் கேட்டபோது அம்மா மறுத்து விட்டாள்.

"எங்க நாளிலே இதெல்லாம் ஏதுடி...? கன்னியாப் பெண்களோட மனசுலேயும் கைகள்ளேயும் லட்சுமி கடாட்சமும், சரஸ்வதி கடாட்சமும் போட்டி போட் டுண்டு நிற்க வேண்டாமோ...? சிரத்தையும் அக்கறையும் இருந்தாக்க மனசு நெனைச்சப்படி கை கோடு இழுக் காதோ...? கோலத்துக்கு அச்சும், குழலும் வந்திருக் குன்னு சொன்னா அந்த நாளிலே சிரிப்பாடி... சிரிப்பா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/43&oldid=579759" இலிருந்து மீள்விக்கப்பட்டது