பக்கம்:துளசி மாடம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 துளசி மாடம்


"இன்னும் வரலே பாட்டீ ! அவன் வரத்துக்கு ஏழு. ஏழரை மணியாகும்..."

இதற்குள் காமாட்சியம்மாள் தோத்திரத்தை, முடித்து வணங்கிவிட்டுத் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த பாட்டிக்கு அருகே வந்து அமர்ந்தாள். பாட்டி மறுபடியும் தன் கேள்வியைத் தொடங்கினாள்.

"இந்த வருஷமாவது சீமையிலேருந்து பிள்ளை வரப் போறானோ இல்லியோ...?"

"வரதா அவன் எழுதியிருக்கானாம். வான்னு' சொல்லி இவரும் பதில் எழுதிப் போட்டிருக்காராம். வேனுமாமா பெண் வசந்தி சொன்னதா இப்போதான் பாரு எங்கிட்டச் சொன்னாள். இவரா இதெல்லாம் எனக்கெங்கே சொல்றார் பாட்டி..?”

"வேனுகோபாலன் பொண் உன் பொண்ணிட்டச் சொல்லித்தான் உனக்கே அவன் வரான்கிறது தெரியற தாக்கும் !"

"ஆமாம் வேற யார் இதெல்லாம் எனக்குச் சொல்றா? இவருக்கோ நான் எதைக் கேட்டாலும் முக்குக்கு ம்ேலே கோபம் வத்துடறது." .

வாசல் திண்ணையில் பக்கத்து விட்டு முத்து மீனாட்சிப் பாட்டியும் விசுவேசுவர சர்மாவின் மனைவி காமாட்சி அம்மாளும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி திண்ணையில் இருந்து தெருவுக்குக் கீழே இறங்கும் படிகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்தாள். - கிழக்கு மேற்காக நீண்டிருந்த தெருவின் மேற்குப் பக்கமிருந்து கட்டை குட்டையாக ஒர் இரட்டை நாடி யுள்ள மனிதர் வந்து கொண்டிருந்தார். இடுப்பில் நாலு: முழம் வேஷ்டி, கறுப்பு நிறத்தில் அரைக்கைச் சட்ட்ை, மேலே ஒரு சிறு துண்டு அணிந்த தோற்றத்தில். :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/46&oldid=579762" இலிருந்து மீள்விக்கப்பட்டது