பக்கம்:துளசி மாடம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 53


உரிமை பாராட்டி ஏக வசனத்தில் பேசிக் கொள்ளுவார் கள். ஆனால் மற்றவர்களிடம் ஒருவரைப் ப ற் றி இன்னொருவர் குறிப்பிட்டுப் பேச நேரும்போதெல்லாம் அவர், இவர் என்று மிகவும் மரியாதையாகத்தான் குறிப் பிட்டுப் பேசுவார்கள். எதிரெதிரான வாழ்க்கை முறை களையும், கொள்கைகளையும் விட்டுக் கொடுக்காமல் நட்பையும் இழந்து விடாமல் அவர்களால் பழக முடிந்தது அந்த அதிகாலை வேளையில் அன்று இறைமுடிமணி தன்னைத் தேடி வந்தி காரியம் என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலாக இருந்தது சர்மாவுக்கு. வந்தவர் தாமாகச் சொல்லுவதற்கு முன் தானே வலிய அவசரப் பட்டு விசாரிப்பது நன்றாக இராது என்று சர்மா இறை முடிமனியின் குடும்ப rேம லாபங்களை விசாரிக்க லானார். இறைமுடிமணியும் சர்மாவின் குடும்ப rேம லாபங்களை விசாரித்தார். பேச்சு ரவியைப் பற்றி விசாரிப்பதில் வந்து நின்றது.

"தம்பி கிட்ட இருந்து லெட்டர் ஏதாச்சும் உண்டா?”

“...போட்டுருக்கான்...புறப்பட்டு வரதாக்கூட எழுதி. யிருக்கான்..."

"எப்ப வருதாம்..."

“தேதி எழுதலே...சீக்கிரமா வருவான்...வரச் சொல்லிப் பதில் எழுதிப் போட்டிருக்கேன்."

மனந் திறந்து பேசுவதற்கும் நம்பிக்கைக்கும் உரிய சிநேகிதனிடம் உண்மை நிலையைச் சொல்லி யோசனை கேட்கலாம் என்று சர்மாவுக்குத் தோன்றியது. இருந் தாலும் இறைமுடிமணி தன்னைத் தேடி வந்த காரியத் தைச் சொல்லுவதற்கு முன் தான் எதையும் பிரஸ்தாபிக்க வேண்டாம் என்று இருந்தார் அவர்.

இறைமுடிமணி அதிகமாக நேரத்தைக் கடத்தாம லும், சுற்றி வளைக்காமலும் வந்த காரியத்தைச் சொல்லி விட்டார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/55&oldid=579771" இலிருந்து மீள்விக்கப்பட்டது