பக்கம்:துளசி மாடம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 துளசி மாடம்


"வடக்குத் தெருக் கோடியிலே, இருக்கே ஒரு காலி மனை ; அதுலே என் டிருமகன்-அதாம்பா...மூத்த மகளோட புருசன்-குருசாமி பலசரக்குக் கடை பேர்ட் னும்கிறான். விசாரிச்ச்திலே அந்த இடம் உன் மடத் துக்குச் சொந்தமானதுன்னு த்கவல் .ெ த ரி (3.5 or gil. முடியுமான அந்த இடத்தை ஒரு நியாயமான வர்டகைக் குப் பேசிவிட்டால் நல்லது. தை உங்கிட்டக் கேட் டுட்டுப் போகலாம்னுதான் வந்தேன்..."

"அந்த இடத்தை வாடகைக்கு விடலாம்னு நானாத் தீர்மானம் பண்ணிட முடியாது; ரீமடத்துக்கு ஒரு வார்த்தை எழுதிக் கேட்டுண்டு அப்பறமா உனக்கு சொல்றேன்..."

"எழுதப் போறதைக் காலதாமதம் பண்ணாமே கொஞ்சம் சீக்கிரமா எழுதேன்."

"இதோ இன்னிக்கே எழுதிடறேம்ப்பா."

"அப்ப நான் வரட்டா ?”

"கொஞ்சம் இரு தேசிகாமணி ? உங்கிட்ட இரு யோசனை கேட்கணும்"

இறைமுடிமணி புதுப்படுவதற்காக எழுந்திருந்தவர் கிறுபடி. திண்ணையில் உட்கார்ந்தார். குரலைத் தணித்துக் கொண்டு ரவியின் கடிதம், தன் பதில் எல்லா வற்றையும் விவரித்துக் கூறினார் சர்மா, பின்பு இறைமுடி மணியிடமே அபிப்பிராயம் கேட்டார்.

'என் நெருங்கின சிநேகிதன்கிற முறையிலே இதில் உன் யோசனை என்ன தேசிகாமணி வ

"உன் மகன் தப்பா எதுவும் பண்ணிடலே. திருமணத் துக்குத் தக்க பருவம் வந்துவிட்ட இளைஞன் ஒருவனுக்கு அவன் பெற்றோர் திருமண ஏற்பாட்ட்ை உரிய காலத் தில் செய்யத் தவறிவிட்டால் அந்த இளைஞன் தானே, தனக்குரிய மணமகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நியாயமானதே என்று அஷ்டாதச தர்ம சாஸ்திரத்தில் ஒன்றாகிய யாக்ஞவல்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே ஞாபகமில்லையா ?” - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/56&oldid=579772" இலிருந்து மீள்விக்கப்பட்டது