பக்கம்:துளசி மாடம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 துளசி மாடம்


பிள்ளையாண்டான் பாரிஸிலேருந்து வரப் போறானே ; அவன் தங்கிக் கொள்ள வசதியா இருக்கட்டு மேன்னு மாடியிலே ஒரு தனி ரூம் போடச் சொல்லியிருக் கேன்" என்று சர்வ ஜாக்கிரதையாக ரவி வருவதாக மட்டும் அவளிடம் சொன்னார் சர்மா.

சாயங்காலம் தற்செயலாக அங்கே வந்த வேணு மாமாவும் அந்த ஏற்பாடுகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சர்மாவைப் பாராட்டினார்.

'அடேடே பரவாயில்லையே தனியா ஒரு ரூம் போடணும்னு நான் சொன்னப்போ வேண்டா வெறுப் பாகக் கேட்டுண்டீர் இங்கே வந்து பார்த்தால் ரொம்ப ஜரூரா எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கீரே !”

"மனசுக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கலையோ செஞ்சு ஆகனுமே ?"

"அப்படியெல்லாம் சொல்லப்படாது சர்மா. மனசுக் குப் பிடிக்காமப் போறாப்ல இப்ப ஒண்னும் நடந்து டலே" என்று சொல்லி வேனுமாமா அவரை உற்சாகப் படுத்திவிட்டுப் போனார். -

பத்து நாட்களுக்குள் எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. தனியறை-தங்குவதற்கு வசதிகள் எல்லாம் செய்யப்பட்டாயிற்று. வேணுமாமாவும் அவர் பென் வசந்தியும் கூட வந்து பார்த்துவிட்டுச் சர்மாவுக்கு நற் சான்றிதழ் வழங்கி விட்டார்கள்.

அந்த வேலைகள் முடிந்து வெள்ளையடித்துச் சுத்தம் செய்த தினத்தன்றுதான் ரவியிடமிருந்து அவனும் கமலியும் புறப்பட்டு வருகிற தேதி முதலிய விவரங்கள் பற்றிக் குறிப்பிட்டுக் கடிதமும் வந்திருந்தது. அதிகம், செலவழித்து விமானத் தபால் உறையில் வைக்கப்பட்டி ருந்த அந்தக் கடிதத்தோடு இன்னோர் ஆச்சரியமும் இணைந்திருந்தது. தமிழக முறையில் அழகிய புடவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/62&oldid=579778" இலிருந்து மீள்விக்கப்பட்டது