பக்கம்:துளசி மாடம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 61


யணிந்து திலகமிட்டுக் கொண்டு ரவிக்கு அருகில் கமலி அமர்ந்திருக்கிற வண்ணப் புகைப்படம் ஒன்றும் ஆந்த உறையில் இருக்கக் கண்டார் சர்மா. வருகிற தேதி முதலிய விவரங்களை எழுதிவிட்டு, "இதனுடன் உள்ள படம் இங்கே இந்தியத் துதரக நண்பர் ஒருவர் எங்களுக்கு அவர் வீட்டில் விருந்தளித்தபோது எடுத்த படம். அவர் வீட்டுப் பெண்களே கமலிக்குப் புடைவை அணிவித்துப் பொட்டுவைத்து அழகு பார்த்து மகிழ்ந் தார்கள். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்ப தாக அந்தப் படத்தைப் பற்றியும் விவரம் குறிப்பிட்டிருந் தான் ரவி. உண்மையில் அந்தப் படத்தில் அந்தக் கோலத்தில் கமலி மிகமிக இலட்சணமாகத் தோன்றி னாள், சர்மாவுக்கு அந்தப் படம் மிகவும் பிடித்துப் போயிற்று. கர்மாட்சியிடம் விஷயத்தைச் சொல்வி விடுவதற்கு அதுதான் சரியான சமயம் என்று அவருக்குப் பட்டது.

முன்னுரை, பீடிகை எதுவும் போடாமல், 'அடியே உன் பிள்ளை எழுதியிருக்கான்...படிக்கிறேன் கேளு!" என்று இரைந்து படித்துவிட்டு மாடப் பிறையில் வைக்கச் சொல்லி உறைக்குள் இருந்த படத்துடன் சேர்த்தே கடிதத்தைக் காமாட்சி அம்மாளிடம் கொடுத் தார் சர்மா. படத்தை அவள் பார்க்க வேண்டுமென்று எண்ணினார் அவர். படத்தைப் பார்க்க நேர்ந்தால் காமாட்சியம்மாள் உணர்ச்சி வசப்படக் கூடும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அந்த அம்மாளிடம் அசாதாரணமான அமைதியே தெரிந்தது.

"ஏன்னா! அவன் மட்டும் தனியா வரலை போலி ருக்கே?...இன்னும் யாரோ கூட வராங்கிற மாதிரி படிச்சேளே?..."

'ஆமாம்! ... அது சரி உங்கிட்டக் கொடுத்த அந்தக் கவர்லே ஒரு படம் இருந்துதே;... அதை நீ பார்க்கலியா காமாட்சி?"

'இல்லியே? லெட்டரை மட்டும்தான் நீங்க படிச்சேள், கேட்டேன், படம் எங்கே இருக்கு?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/63&oldid=579779" இலிருந்து மீள்விக்கப்பட்டது