பக்கம்:துளசி மாடம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 துளசி மாடம்


சர்மா அந்த உறையை மறுபடி வாங்கி அதிலிருந்த படத்தைத் தனியே எடுத்து அவளிடம் நீட்டினார். காமாட்சியம்மாள் படத்தை வாங்கிப் பார்த்தாள்.

'இந்தப் பொண் யாரு?" 'அதான் எழுதியிருக்கானே, ... கமலின்னு ... படிச் சேனே நீ கேழ்க்கலியா?"

"யாரு இவ?” 'ரொம்ப லட்சணமா இல்லை?"

'வயசுக்கு வந்து நல்ல கலரும் இருந்து உயரமும் வளர்த்தியுமா வந்தா எந்தப் பொண்ணும் அழகுதான். அழகுக்கு என்ன கொறைச்சல்? இil யாருன்னு ச்ொல்லுங்கோளேன்...? புடைவை பாட்டு எல்லாம் இருந்தாலும் நிறம், பார்வை ஒண்னும் நம்மூர்ச் சாயல்லே இல்லியே?"

'ரவியோட சிநேகிதி...பிரெஞ்சுக்காரி...?"

"அவனோட இல்கே கூட வரதா எழுதியிருக்கானே... அது இவதானே?"

'ஆமாம்."

'நம்ம தேசம் ஊரு எல்லாம் சுத்திப் பார்க்கறத்துக் காக வராளாக்கும்."

"ஆமாம்! அப்படித்தான் இருக்கும்னு நினைக் கிறேன்."

இதற்கு மேல் காமாட்சியம்மாள் அவரிடம் எதுவும் கேட்டுக் கொண்டு நிற்கவில்லை. கடிதத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய் விட்டாள். தனக்கும் கமலிக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டு முன்பு ரவி எழுதிய கடிதத்தை வேணுமாமாவுக்கும் அவர் மகள் வசந்திக்கும் மட்டும் காட்டிவிட்டு இரும்புப் பெட்டியில் ரகசியமாக வைத்துப் பூட்டிய மாதிரி இந்தக் கடிதத்தைச் சர்மா பத்திரப்படுத்தவில்லை. கூடத்தில் உள்ள மாடப்பிறை யில் மற்றெல்லாக் கடிதங்களையும் சாதாரணமாகப் போட்டு வைப்பதுபோல் போட்டு வைத்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/64&oldid=579780" இலிருந்து மீள்விக்கப்பட்டது