பக்கம்:துளசி மாடம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 63


சாயங்காலம் கல்லூரியிலிருந்து வந்தபின் குமார், பார்வதி எல்லோருமே அந்தக் கடிதத்தைப் படித்தார் கள். படத்தைப் பார்த்தர்ர்கள். தீக்குச்சியை உரசிச் சுடர் தோன்றி அந்தச் சுடர் விரலைச் சுடுகிற எல்லைக்கு வந்ததும் குச்சியைச் சுடரோடு அவசர அவசரமாகக் கீழே போட்டு விடுகிற மாதிரிக் குழப்பத் தைத்தான் இனி உண்டாக்கும் என்ற எல்லையை அடைந்துவிட்ட அந்த ரகசியத்தை இப்போது மனத் திலிருந்து உலகுக்காக வெளியேற்றியிருந்தார் சர்மா. தொடக்கத்தில் அவர் மனத்திலிருந்த விகல்பமும் வெறுப் பும் கூட இப்போது மெல்ல மெல்ல அமுங்கிப் போயிருந் தன. சில ஆயிரம் ரூபாய்களைச் செலவழித்துத் தனியறை-குளியல் வசதி இணைப்பு, வாஷ்பேஸின்கண்ணாடி, சாப்பாட்டு மேஜை நாற்காலிகள்...எல்லா ஏற்பாடும் அந்தக் கர்நாடகமான பழைய வீட்டில் செய்யப்பட்டிருந்தன. பம்பாயில் இரண்டு தினங்களும் சென்னையில் நான்கு தினங்களும் தங்கியபின் சென்னை யிலிருந்து இரயிலில் புறப்பட்டுச் சங்கரமங்கலம் வருவதாக ரவி எழுதியிருந்தான். முதலில் மெதுவாக நகர்ந்த நாட்கள் அவனும் கமலியும் வருகின்ற தினம் நெருங்க நெருங்க விரைவாக ஓடின. யாரும் பம்பாய்க்கோ, சென்னைக்கோ எதிர்கொண்டு வர வேண்டாம் என்றும் தானே சங்கரமங்கலம் வந்து சேர்ந்து விடுவதாகவும் ரவியே கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தான். -

'உம்ம வழக்கம்போல இரட்டைமாட்டு வண்டி கட்டிண்டு அவள்ளை வரவேற்கி ரயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுடாதேயும். என்னோட கார் தவிரவும் பக்கத்து எஸ்டேட்காரரான சாரங்கபாணி நாயுடு கிட்ட இன்னொரு கார் இரவல் கேட்டிருக்கேன் விரவாளை அழைச்சிண்டு வர எல்லாருமா ரெண்டு கார்லே ஸ்டேஷ னுக்குப் போகலாம். அன்னிக்கு முகூர்த்த நாள். அவாளை ஸ்டேஷன்லேருந்து அழைச்சிண்டு வந்து விட்டுட்டு எனக்குப் பூமிநாதபுரத்துல்ே ஒரு கல்யாண் த் துக்குப் போகணும்' என்றார் வேணுமாமா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/65&oldid=579781" இலிருந்து மீள்விக்கப்பட்டது