பக்கம்:துளசி மாடம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 துளசி மாடம்


'அம்மா என்ன சொல்றா வசந்தி ?" என்ற கேள்வி யோடு அவர்களருகே சென்றான் ரவி.

'ஒண்ணுமில்லே மாமி இப்பத்தான் விளக்கேற்றித் துளசி பூஜை பண்ணி முடிச்சிருக்கா. நாங்க ரெண்டு பேரும் குளிக்காமக் கிட்டப் போயித் துளசி மாடத்தைத் தொட்டுடப் போறோமோன்னு பயந்துண்டு வந்து எங்கிட்டச் சொல்லிட்டுப் போறா ரவி ! ஆனா மாமி வந்து சொல்றதுக்கு முன்னாடி கமலியே. 'கோலம், குங்குமம், மாடத்தில் எரியும் விளக்கு எல்லாம் பார்த்தால் இப்பத்தான் பூஜை முடிஞ்ச மாதிரி இருக்கு. நீயும் ஸ்நானம் பண்ணின மாதிரி தெரியலே. தானும் ஸ்நானம் பண்ணலே...எதுக்கும் தீட்டு இல்லாமே ஒதுங்கி நின்னு பார்ப்போம்"னு எங்கிட்டச் சொல்லிட்டா. அதையே மாமாகிட்டச் சொன்னேன் நான், இந்து மேனர்ஸ் கஸ்டம்ஸ் அண்ட் செரிமனிஸ்’னு ஏதோ புஸ்தகத்திலே கமலி இதெல்லாம் ஏற்கெனவே படிச்சிருக்காளாம்."

இதைக் கேட்டு ரவி புன்முறுவல் பூத்தான். கமலியும் அவனை நோக்கிப் புன்னகை செய்தாள்.

'கமலியைத் தோட்டத்துக்குக் கூட்டிண்டு போ வசந்தி ! காலம்பர நீங்க ஸ்டேஷன்ல போட்ட மல்லிகை மாலையின் வாசனையைப் புக ழ் ந் து குறைஞ்சது இதுக்குள்ளே நூறு தடவையாவது அவ எங்கிட்டச் சொல்லியிருப்பா. அவளுக்குத் தெரிஞ்ச ஒரே மல்லிகை பாரிஸ்லே ஜாஸ்மின்’னு ஒரு மெட்ரோ ஸ்டேஷன் இருக்கே அதுதான். ந ம் ம தோட்டத்திலே நிஜம் மல்லிகைச் செடியையே பூவோட அவளுக்குக் காமி.” -

ரவி இப்படிக் கூறியதும் அவர்கள் தோட்டத்துப் பக்கமாக நகர்ந்தார்கள். ரவி மீண்டும் வீட்டுக்குள் திரும்பிச் சமையல் கட்டின் வாசலில் அம்மாவின் ஆசார எல்லை, எந்த இடம்வரை தன்னை அநுமதிக்குமோ அந்த இடத்தில நின்று கொண்டு உள்ளே வேலையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/80&oldid=579796" இலிருந்து மீள்விக்கப்பட்டது