பக்கம்:துளசி மாடம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 துளசி மாடம்


ஆனால் அம்மாதான் கரைக்க முடியாத கருங்கல்லாக இருப்பாளோ என்று பயந்தான் அவன். மனத் தாங்க லும், ஆதங்கமும் தெரியும்போது இதயம் சுருங்கி விடு கிறாற் போல அவளுடைய பதில் வார்த்தைகள் மிகவும் சுருங்கியிருப்பதை ரவி கண்டான். பத்து நிமிஷத்துக்கு மேல் அவன் சமையல் கட்டின் வெளியே காத்து நிற்க வேண்டியிருந்தது.

அப்புறம்தான் ஒருவழியாக அம்மா வெளியே வந்தாள். 'தள்ளி நின்னுண்டு கையை நீட்டுடா ரவி."எங்கே வலது கையில் பிரம்பு அடி விழுமோ என்றுகூடச் சந்தேகமாயிருந்தது ரவிக்கு. ஆனால் நடந்ததென்னவோ முற்றிலும் வேறானதாயிருந்தது.

அப்போதுதான் க ைட ந் த பசு வெண்ணெயில் வெல்லச் சர்க்கரையைக் கலந்து, உருட்டி, சாப்பிடுடா ! உனக்குத்தான் ரொம்பப் பிடிக்குமே'-என்று ரவியின் வலது கையை நீட்டச் சொல்லித் தூக்கி இடித்து விடாமல் கவனமாகத் தள்ளி நின்று கொண்டு போட்டாள் அவன் அம்மா.

எந்த வயதிலும் எந்தச் சூழலிலும் எவர் முன்னிலை விலும் தான் பெற்ற பிள்ளையைச் சுலபமாக மறுபடி பச்சைக் குழந்தையாக மாற்றிவிட முடிகிற வித்தையை ஒரு தாயினால்தான் செய்ய முடியும், அறிவு, ஆணவம், புகழ், மேதாகர்வம், மூப்பு முதலிய எல்லாப் போர்வை களும் கழன்று விழச் செய்து தன் மக்களைத் தன்முன் குழந்தையாக்கி விடும் ஆற்றல் தாய்க்கு இருந்தது.

எங்கோ கண்காணாத சீமையில் மிகவும் புகழ் பெற்ற புரொ..பஸராக இருக்கும் வயதுவந்த தன் மகனை அரை நொடியில் ஆடையணியாத பருவத்து வெள்ளி அரை ஞானும் தாயத்தும் கட்டிய சிறு பாலகனாக மாற்றி விட்டாள் காமாட்சியம்மாள்.

தன் அம்மா கொடுத்த சுவையான பசுவெண்ணெயை விழுங்கி விட்டு, கையை நீட்டுடான்னதும் எங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/82&oldid=579798" இலிருந்து மீள்விக்கப்பட்டது