பக்கம்:துளசி மாடம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 81


பிரம்படி குடுத்துடப் போறியோன்னு பயந்துட் டேன்.ம்மா!" என்றான் ரவி. -

'பிரம்பாலே இல்லேடா, நீ பண்ணியிருக்கிற காரி யத்துக்கு உன்னை உலக்கையாலேயே மொத்தனும் போல இருக்கு."

சரிசமமான அளவில் பிரியமும் கோபமும் கலந்த குரலில் இந்தக் கடிந்துரை இருந்தது. இதற்கு ரவி ஏதோ பதில் சொல்லத் தொடங்கிச் சொல்லுவதற்குள் வாசலில் பக்கத்து வீட்டு முத்துமீனாட்சிப் பாட்டியின் குரல் கேட்டது. பாட்டி காமாட்சியம்மாளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்து விட்டாள், அம்மா உள்ளே சமையல் காரியமாக இருந்த தாலும், பாட்டி தேடி வந்துவிட்டதாலும், மாடிக்குப் போகலாம் என்று திரும்பினான் ரவி. ஆனால் பாட்டி பிடித்துக் கொண்டாள்.

'ரவிதானேடா?...கார்த்தாலே வந்தியா? செளக் கியமா இருக்கியா"

"ஆமாம் பாட்டி செளக்கியந்தான்."-சொல்லி விட்டு ரவி நழுவ முயன்றான். பாட்டி விடவில்லை. 'கண் பார்வை மங்கிப் போச்சு! கிட்ட வாயேண்டா நன்னாப் பார்த்துடறேன்."-என்று வலது கைவிரல் களால் நெற்றியிலிருந்து ஒரு சன்ஷேட் இறங்கின மாதிரி வைத்துப் பார்வைக்கு வசதி செய்துகொண்டு நெருங்கி வந்து ரவியை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உற்றுப் பார்த்தாள். -

'முன்னைவிடச் சேப்பாயிருக்கே குளிர் தேசமோல் லியோ? உடம்பு தானா வெளுப்புக் குடுத்துண்டிருக்கு. என்னடி காமு! நான் சொல்றது சரிதானேடீ?"

தான் முன்னைவிட நிறம் வெளுத்திருக்கிறதைப் பற்றிய விவாதம் அம்மாவுக்கும் பாட்டிக்கும் இடையே நிகழட்டுமென்று மாடிக்குத் திரும்பினான் ரவி. பதினாறு பக்கங்கள் கொண்ட ஆங்கிலத் தினசரியில் முதற் சில

து-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/83&oldid=579799" இலிருந்து மீள்விக்கப்பட்டது