பக்கம்:துளசி மாடம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 83


தெரியலையா உனக்கு ? எனக்கே உன் லெட்டரைப் பார்த்ததும் அப்படியே மலைச்சுப் போச்சு, என்ன செய்யறதுன்னே தோணலை! அப்புறம் வேணுமாமா வும் அவர் பொண் வசந்தியும் படிப்படியா என்னைச் சமாதானப்படுத்தினான் னு வச்சுக்கோயேன்."

"சண்டைன்னும் சமாதானம்னும் பேசறாப்பிலே எந்தத் தப்பும் இப்ப நடந்துடலே அப்பா! நானும் ஒளிவு மறைவா உங்களுக்கு எதையும் எழுதலே. தப்பபிப்ரிாயம் வரக்கூடாதுன்னுதான் முன் கூட்டியே எல்லாம் எழுதி னேன். வேணுமாமாவும், வசந்தியும் பாரிஸுக்கு வந்திருந்தப்பக்கூட அவாகிட்டே நான் எதையும் மறைக்கவே! உங்ககிட்டேயும் அவாளை இதைப் பத்திப் பேசச் சொல்லித்தான் அனுப்பிச்சேன்."

'நீ சொல்றதெல்லாம் நியாயம்னே வச்சுக்கலாம்டா! இந்த ஊர் எப்படிப்பட்ட ஊர் : இங்கே நமக்கு எப்பிடி எப்படி விரோதிகள்ளாம் இருக்காங்கறது. நான் சொல்லித்தான் தெரியனுமா உனக்கு வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் பிங்கற மாதிரி வைட்டமின் வி-அதாவது வைட்டமின் வம்புங்கிறது இந்த அகஸ்திய நதிக்கரைக் கிராமங்களுக்கு ஒரு முக்கியமான தேவை. எந்த வைட்டமின் டெஃபிஷியன் ஸியையும் தாங்கிக்க இவாளாலே முடியும். வைட்டமின் வி'டெஃபிஷியன் லியை ஒருநாள் கூட இவாளாலே தாங்கிக்க முடியாது. புராதன காலத்திலே அதிதிகளையும் வழிப் போக்கர் களையும், பந்து மித்திரர்களையும் வரவேற்கவும், உபசரிக்கவும்தான் கிராமத்து வீடுகளிலே திண்ணைகள் ஏற்பட்டுது. ஆனா இப்போ வம்பு பேசறதுக்கும், புறம் பேசறதுக்கும், கோள் மூட்டறதுக்கும்தான் அது பிரயோசனப்படறது. இந்த ஊர்லே மூணு தெரு விலேயுமா முந்நூறு திண்ணைகளுக்கு மேலே இருக்குடா! மறந்துடாதே...அந்தத் திண்ணைகளும் ஆற்றங்கரைப் படித்துறைகளும் இன்னும் பலநாள் உன்னைப் பத்தியும் உன்னோட வந்திருக்கிறவளைப் பத்தியுந்தான் பேசிண்டிருக்கும்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/85&oldid=579801" இலிருந்து மீள்விக்கப்பட்டது